சென்னை: புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தினர் இன்று  நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், வழக்கின் விசாரணை தடை பட்டது. இதனால், விசாரணைக்கு வந்த பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.

நாடு முழுவதும் ஜூலை 1ந்தேதி முதல் புதிய 3 குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. இதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதை எதிர்த்து தமிழ்நாடு  வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தினர்.

அதன்படி,   3 புதிய குற்றவியல் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று ஒருநாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டு வருவதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் பெரும்பாலான வழக்குகள் தள்ளி வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் விசாரணைக்கு வந்த பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

வெளியூரில் இருந்து விசாரணைக்கு வந்த பலர், வழக்கறிஞர்களின் போராட்டத்தால் தங்களது செலவு ஏற்பட்டுள்ளதுடன், ஒரு நாள் வீணாகி போன என தங்களது அதங்கத்தை வெளிப்படுத்தினர். நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறாது என அறிவித்திருந்தால், தாங்கள் வந்து செல்வது மிச்சமாகும் என்றும் கூறிச் சென்றனர்.