சென்னை: நீட் தேர்வுக்கு எதிரான முழக்கங்கள் நாளைய வெற்றிக்கான அறிவிப்புகள் என திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
நீட் தேர்வு முடிவுகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நாடு முழுவதும் மாணவர்கள் நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் தேர்வு நடத்த வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்ற விசாரணையில் உள்ளது. இதற்கிடையில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக மாணவரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுகுறித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், நீட் எனும் சமூக அநீதிக்கு எதிரான தி.மு.க.வின் போரில் இன்று ஒலிக்கும் முழக்கங்கள் நாளைய வெற்றிக்கான அறிவிப்புகள் என பதிவிட்டு உள்ளார்.