இந்தியா – ரஷ்யா இடையிலான உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி ஜூலை 2வது வாரத்தில் ரஷ்யா செல்லவுள்ளார்.
இதுகுறித்து கிரெம்ளின் மாளிகை அதிகாரிகள் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரதமரின் பயணம் குறித்து இந்திய அதிகாரிகள் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
இதற்கு முன் பிரதமர் மோடி 2019ம் ஆண்டு ரஷ்யா சென்றிருந்தார். அதேபோல் 2021ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.