சென்னை: இலங்கையைச் சேர்ந்த பிரபல  வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர்  அப்துல் ஹமீத் காலமானதாக செய்திகள் பரவிய நிலையில், அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து  வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்  BH அப்துல் ஹமீது. அதில் தான் 3வது முறையாக செத்து பிழைத்துவிட்டேன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார்.

தொலைக்காட்சி இல்லாத காலத்தில் இலங்கை வானொலியில் நிகழ்ச்சிகளை அப்துல் ஹமீத் தொகுத்து வழங்கினார் என்பதும் அவரது தமிழ் உச்சரிப்பு, கணீர் என்ற குரல் அனைவரும் ரசிக்கும்படி இருக்கும்   இலங்கை வானொலியின் அறிவிப்பாளராக இருந்து அதன் பின்  தமிழ்நாட்டின பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அப்துல் ஹமீத் திடீரென காலமானதாக வதந்தி பரவியது. இதுதொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகிக்கொண்டிருந்தது. இதையடுத்து,  அவர் இலங்கையில் நலமுடன் இருப்பதாக மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே இதுபோல் இரண்டு முறை அவர் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவிய நிலையில், தற்போது 3வதுமுறையாகஅவர் காலமானதாக வதந்திகள் பரவி, தமிழர்களிடையே வேதனையை ஏற்படுத்திய நிலையில், அவர் நலமுடன் இருக்கிறார். இதுதொடர்பாக அவர் வீடியோ வெளியிட்டு உள்ளார்.

நான் இறக்கவில்லை…. எந்த ஒரு செய்தியையும் தீர விசாரித்து நிச்சயப்படுத்திய பிறகே பதிவிடும் ஊடகப் பண்புதான் இறந்துவிட்டது…. என சமூக வலை ஊடகங்களை கடுமையாக சாடியுள்ளதுடன், தனது முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், “இலங்கையில் நலமுடன் இருக்கிறேன். இது வெறும் வதந்தி. பலர் என்னை தொடர்புக் கொண்டு பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அந்த காணொளியை, இங்கே காணலாம்…