சென்னை: இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையம் அமைக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறைஅமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

நவீன டிஜிட்டல் வளர்ச்சி, உணவு பழக்க வழக்க முறை, பணிகள் மற்றும் மக்களின் மேன்மையான வாழ்வியல் முறை போன்றவற்றால்,  பல்வேறு நோய்கள், உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு வருவதால், இந்தியாவில் பெண்கள் கருவுருவாதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது.  இதனால் நாடு முழுவதும் புற்றீசல் போல செயற்கை கருத்தல் மையம் அதிகரித்து வருகிறது. இந்த கருத்தரித்தல் மையங்கள் மூலம் பல்வேறு முறைகேடுகளும் அரங்கேறி வருகின்றன. சிறுமிகள் உள்பட பலர் கடத்தப்பட்டு, கரு உருவாகும் நேரத்தில் வலுக்கட்டாயமாக கரு எடுக்கப்பட்டு வருகிறது.  இதுமட்டுமின்றி, செயற்கை கருத்தலிலுக்கு பல லட்சம்  பிடுக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற செயல்களில் பல மருத்துவமனைகள் திரும்ப திரும்ப தம்பதிகளை வரவழைத்து கோடிக்கணக்கில்  பணத்தை பிடுங்கி வருகின்றன.

இதுபோன்ற முறைகேடுகளை தடுக்க அரசே, அரசு மருத்துவமனைகளில்  செயற்கை கருத்தரித்தல் மையம் திறக்க வேண்டும் என வேண்டுகோள் வலுப்பெற்று வந்தது. இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது. அப்போது,  சென்னை, மதுரை அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையங்கள் விரைவில் துவக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மார்ச் மாதம்  நம்பிக்கை தெரிவித்தது.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டு உள்ளது. முதலில், சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் அதிநவீன செயற்கை கருத்தரித்தல் மையம், ரூ.6.97 கோடி மதிப்பில் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அமைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, பல்வேறு முக்கிய அரசு மருத்துவமனையில் அதிநவீன செயற்கை கருத்தரித்தல் மையம் அமைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பேசிய தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் இலவச செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழ்நாட்டில் தான் முதன்முதலில் திறக்கப்பட்டுள்ளது என பெருமிதத்துடன தெரிவித்துள்ளார்.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடங்களை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுபிரமணியன் திறந்து வைத்தார். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் புதிய சுகாதார கட்டிடம் மற்றும் குளிக்கரை பகுதியில் செவிலியர்களுக்கு கட்டப்பட்ட குடியிருப்பு ஆகியவற்றினை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுபிரமணியன் திறந்து வைத்தார்.

இதே போல திருவாரூர் மாவட்டத்தில் வடகண்டம், உத்தமதானபுரம், கண்டியூர், நுணாகாடு, தீபங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எட்டு மருத்துவ கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டது. இதற்காக திருவாரூர் அருகே வடகண்டம் பகுதியில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையத்தினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுபிரமணியன் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

பின்னர் பொதுமக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் மாசுபிரமணியன், இந்திய வரலாற்றில் இலவசமாக செயற்கை கருத்தரித்தல் மையம் தமிழ்நாட்டில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்னுயிர் காப்போம் திட்டத்தில் இதுவரை 237, தனியார் 457 ஆஸ்பத்திரிகள் என 694 ஆஸ்பத்திரிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, இதுவரை 2 லட்சத்து 54 ஆயிரத்து 256 விபத்துகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக 2 ஆண்டுகளில் மட்டும் அரசு ரூ.221 கோடியே 11லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இதற்கான சிகிச்சை உதவி ரூபாய் ஒரு லட்சம் என்பது ரூபாய் இரண்டு லட்சமாக உயர்த்தபடும் என முதல்வர் தெரிவித்துள்ளார். வரும் ஜூலையில் இது நடைமுறைக்கு வர உள்ளது.

தமிழ்நாட்டில் மருத்துவ வசதிக்கென சுமார் 2 ஆயிரத்து 500 கட்டடங்கள் கட்ட திட்டமிட்டு இருவரை ஆயிரத்து 100 க்கும் மேற்பட்ட புதிய கட்டடங்கள் கட்டி பயனுக்கு தரப்பட்டுள்ளது என்றார்.

தனியார் மருத்துவமனையில் செயற்கை கருத்தலிக்கு  ரூ.10 லட்சம் செலவாகும் நிலையில்,  அரசு மருத்துவமனைகளில்  இலசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்றும், “கருத்தரிக்காததற்கான காரணம் என்னவென்று கண்டறியப்பட்டு, அதற்கேற்றாற் போல இங்கு சிகிச்சைகள் அளிக்கப்படும். முதற்கட்டமாக 50 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படும் எனவும் இளம் வயதினருக்கு பல்வேறு நிலைகளில் கருத்தரிப்பு சிகிச்சையும், 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வழிவகை செய்யப்படும்’  தாய் சேய் நல இயக்குநர் கலைவாணி தெரிவித்துள்ளார்.