சென்னை: தலைநகர் சென்னையில் சிலரை கொலை செய்ய முகாமிட்டிருந்த கூலிப்படையை சேர்ந்த 12 பேர் கொண்ட கும்பலை சென்னை மாநகர காவல்துறையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீப காலமாக சென்னை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் அதிக அளவில் கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அதுபோல போதை பொருள் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினாலும், குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பட்டியலிட்டு காவல்துறைக்கு எச்சரிக்கை செய்திருந்தார். இந்த நிலையில், 12 பேர் கொண்ட கூலிப்படை கும்பல் சென்னையில் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ராதா. இவன் கூலிப் படையை நடத்தி வருவதாகவும், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இவரை தீர்த்துக்கட்டும் நோக்கில், எதிர்தரப்பு ரவு கும்பல்கள், முதற்கட்டகமாக ராதாவின் நெருகிய கூட்டாளிகள் 3 பேரை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்தனர். அதற்கான தனி கூலிப்படை அமைக்கப்பட்ட உள்ளதாக ரகசிய தகவுல் காவல்துறைக்கு கிடைத்தது.
இதையடுத்து, சென்னை வடக்கு மண்டல அதிதீவிர குற்றப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதுடன் ரகசிய விசாரணையையும் முடுக்கி விட்டனர். அப்போது, கூலிப்படை தலைவன் ராதாவின் கூட்டாளிகள் 12 பேர் துப்பாக்கி முனையில் அதிரடியாக கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், அரும்பாக்கம் ராதாவின் கூட்டாளியும் பிரபல ரவுடியுமான மறைந்த ரவிடியாக உமர் பாட்ஷாவின் 2ம் ஆண்டு நினைவு தினம் ஜூலை 22ம் தேதி வர உள்ளது. அதற்குள் எதிர் தரப்பைச் சேர்ந்தவர்களை தீர்த்துக்கட்ட வேண்டும் என்ற இலக்குடன் ரவுடி கும்பல் திட்டம் தீட்டியது தெரியவந்தது. அத்துடன் ள் கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர், ரவுடி ஒருவரின் கூட்டாளி உள்ளிட்ட 3 பேரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கூலிப்படையில், சூளைமேடைச் சேர்ந்த மெரிலின் விஜய் (39), கே.கே.நகரை சேர்ந்த மணிகண்டன் (34), அமைந்தகரை பகுதியை சேர்ந்த ஜிவான் (27), நீலாங்கரையை சேர்ந்த அஜித்குமார் (25), சாலிகிராமத்தை சேர்ந்த சுரேந்திரன் (34), சதீஷ்குமார் (30), சமீம் பாஷா (29) சரவண பெருமாள் (30), மடிப்பாக்கத்தை சேர்ந்த மகேஷ் (44), அரும்பாக்கத்தை சேர்ந்த அப்துல் (24), வியாசர்பாடியை சேர்ந்த மதன்குமார் (36), ஆகியோர் இடம் பெற்றிருந்தது தெரியவந்தது. இதில், சலீம் பாட்ஷா மற்றும் சமீம் ஆகியோர் கடந்த 2022ல் எர்ணாவூரில் கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி உமர் பாட்ஷாவின் உறவினர்கள்.
இதனையடுத்து 12 ரவுடிகளையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர். போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சென்னை நடைபெற இருந்த 3 கொலைகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கொலை நகரமாகும் தலைநகரம்! பட்டியல் வெளியிட்டு அண்ணாமலையை குற்றச்சாட்டு!!