சென்னை:  திமுகiவச் சேர்ந்த முன்னாள்   அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 39வது முறையாக இன்று மேலும்  நீடிக்கப்பட்டுள்ளது.

திமுகவில் செல்வாக்கு மிகுந்த நபராக இருந்த கரூரை செந்தில் பாலாஜி, திமுகவிலும் அமைச்சராக இருந்துபணியாற்றி வந்தார். இவர் கடந்த அதிமுக ஆட்சியின்போது  செய்தஊழல் முறைகேடு காரணமாக, சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார்.  அவர் கைது செய்யப்பட்டு  இன்றுடன் கைதாகி ஓராண்டாகியுள்ள நிலையில்,  இன்று காணொலி வாயிலாக சென்னை அமர்வு நீதிமன்றத்தில்நீதிபதி அல்லி  முன்பு  ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 39வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, ஜூன் 19ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் காலத்தில் பணியாற்றிய வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த மனு மீது ஜூன் 19ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.