டெல்லி: “ராமரை வணங்கி படிப்படியாக ஆணவம் கொண்டவர்களால் பெரும்பான்மை பெற முடியவில்லை. இது இறைவனின் நீதி என ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி இந்திரேஷ் குமார் விமர்சனம் செய்துள்ளார்.
ஏற்கனவே ஆர்.எஸ்.தலைவர் மோகன் பகவத், பாஜகவின் அரசியல் பிரசாரம் குறித்துகடுமையாக விமர்சனம் செய்த நிலையில், ஆர்எஸ்எஸ் மூத்ததலைவரான இந்திர குமாரும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். “ராமரை வணங்கி படிப்படியாக ஆணவம் கொண்டவர்கள் மிகப்பெரிய கட்சியாக ஆக்கப்பட்டனர். ஆனால் அவர்களின் ஆணவத்தால் அவர்களுக்கு முழுப் பெரும்பான்மை வழங்கப்படவில்லை. ராமரை எதிர்த்தவர்களால் போதுமான பலத்தை திரட்ட முடியவில்லை. இது இறைவனின் நீதி” என்று கூறியுள்ளார்.
ராஜஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்எஸ்எஸ் நிர்வாகி இந்திரகுமார், ஆணவம் கொண்டவர்கள் ராமரால் தண்டிக்கப்பட்டனர் என்று பாஜகவை கடுமையாக சாடினார். பாரதிய ஜனதா கட்சியின் பெயரை நேரடியாக கூறாமல், விமர்சித்தவர், ராமர் பெயரில் திமிர்பிடித்தவர்கள் பெரும்பான்மை இல்லாததால் ராமரால் நிறுத்தப்பட்டதாக விமர்சித்துள்ளார்.
மேலும், 2024 லோக்சபா தேர்தலில், பாஜக தனிப்பெரும்பான்மை பெற முடியாமல் போனது, அவர்களின் எதிர்பார்ப்பு 240க்கும் நிறுத்தப்பட்டது. அவர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) பங்காளிகளின் ஆதரவுடன்தான் ஆட்சி அமைக்க முடிந்தது.
“ஜனநாயகத்தின் மரபுகளைப் பாருங்கள். ராமரை வணங்கி மெல்ல மெல்ல அகந்தை கொண்டவர்கள் தனிப்பெரும் கட்சியாக ஆனார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஆணையும் அதிகாரமும் ஆணவத்தால் ராமரால் நிறுத்தப்பட்டது.
“ராமனை எதிர்த்தவர்கள் யாராலும் அதிகாரத்தைப் பெற முடியவில்லை, ஒன்று கூடினாலும், அவர்கள் அனைவரும் நம்பர் ஒன்னுக்குப் பதிலாக இரண்டாவது இடத்தில் நின்றனர். அதனால்தான், கடவுளின் நீதி விசித்திரமானது அல்ல, உண்மைதான்”
“இறைவன் ராமரின் நீதி மிகவும் உண்மையானது மற்றும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று குமார் கூறினார்.
ஏற்கனவே ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ‘உண்மையான சேவகனுக்கு’ ஆணவம் கிடையாது என்று கூறிய சில நாட்களுக்குப் பிறகு இந்திர குமாரின் கருத்து வந்துள்ளது. பகவத்தைப் போலவே, குமாரும் தனது உரையில் ‘அஹங்கர்’ (ஆணவம்) என்ற வார்த்தையை வலியுறுத்தினார், மேலும் பாஜகவைப் பற்றிய அவரது வெளிப்படையான குறிப்புக்குப் பிறகு, இந்திய கூட்டணியின் பெயரைக் குறிப்பிடாமல், ராமர் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் 236 இல் நிறுத்தப்பட்டதாகக் கூறினார்.
“பக்தி செய்த ஆனால் திமிர்பிடித்த கட்சி, அந்த கட்சி 241 (sic) இல் கட்டுப்படுத்தப்பட்டது, ஆனால் தனிப்பெரும் கட்சியாக ஆக்கப்பட்டது. ராமரை அவமரியாதை செய்தவர்கள், அனைவரும் சேர்ந்து 236 ஆக கட்டுப்படுத்தப்பட்டனர், இது உங்கள் நம்பிக்கையின்மைக்கு நீங்கள் வெற்றிபெற முடியாது என்று கூறி (தண்டனை) ”என்று கூறினார்.
சமீப காலமாக, பாஜக மற்றும் அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் இடையேயான உறவில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன, மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், முன்பு பா.ஜ.க. ஆர்எஸ்எஸ் தேவை, இப்போது கட்சியே இயங்குகிறது, ஆர்எஸ்எஸ் ஒரு கலாச்சார முன்னணி. மக்களவையில் பாஜக தனிப்பெரும்பான்மையைப் பெறத் தவறியதில் இருந்து இரு தரப்புக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.