சென்னை
சென்னையில் சில இடங்களில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

கடந்த சில நாட்களாக சென்னையில் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. இன்று காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்தது.
தற்போது சென்னையில் மாலை சட்டென்று வானிலை மாறியது. நகரின் பல பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
சென்னையில் எழும்பூர், சென்னை சென்டிரல், புரசைவாக்கம், சேத்துப்பட்டு, பல்லாவரம், கிண்டி, அம்பத்தூர், கொரட்டூர், கீழ்கட்டளை, பூந்தமல்லி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்பட நகரின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
இந்த திடீர் மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel