கோவை: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளுக்கு உதவியதாக கூறப்படும், கோவையின் சில பிரபலமான இஸ்லாமிய டாக்டர்கள் வீடுகளில் என்.ஐ.ஏ சோதனை நடத்தி வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூருவின் பிரபலமான ராமேஸ்வரம் கஃபேயில், மார்ச் 1;ந்தேதி குண்டு வெடிப்பு நடந்தது. இதில் பலர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, குண்டு வெடிப்பை வழக்கை என்ஐஏ கையில் எடுத்து விசாரித்து வருகிறது. இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், குற்றவாளிகள் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய என்ஐஏ, அதிகாரிகள், மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் பதுங்கி இருந்த, பயங்கரவாதிகள் முஸாவீர் ஹுசைன் ஷாகிப், அப்துல் மதீன் அகமது தாஹா, ஆகியோரை கைது செய்தனர். இருவரையும், 10 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அதில் கிடைத்த தகவல்களைக்கொண்டு மீண்டும் பல்வேறு இடங்களில் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையில் இரு இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர். கோவை , பெரிய சுப்பண்ண கவுண்டர் தெருவைச் சேர்ந்த டாக்டர் நஹீம் மற்றும் சாய்பாபா காலனியில் உள்ள நாராயணகுரு சாலையைச் சேர்ந்த டாக்டர் ஜாபர் இக்பால் ஆகியோரின் வீடுகளில் என்.ஐ.ஏ சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.