பசு மாட்டு மூத்திரத்திற்கு FSSAI உரிம எண் வழங்கியதாக சமூக வலைதளத்தில் உலாவரும் செய்தி போலியானது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FSSAI உரிம எண்ணுடன் கூடிய பசு மாட்டு மூத்திரம் தற்போது சந்தையில் கிடைப்பதாக வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வந்தது.

கோமிய பாட்டில் படத்துடன் பகிரப்பட்ட இந்த தகவல் சமூக வைத்தளத்தில் வைரலானது.

இதனை அடுத்து, மாட்டு மூத்திரத்திற்கு உணவுப் பாதுகாப்புத் துறை எந்தவொரு FSSAI உரிமமும் வழங்கவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

பசு மாட்டு மூத்திரத்தை குடித்தால் அனைத்து விதமான நோய்களும் குணமாவதாகவும் அது சர்வலோக நிவாரணியாக திகழ்வதாகவும் சமீப ஆண்டுகளாக பல பிரபலங்கள் கூறிவந்த நிலையில் FSSAI உரிம எண்ணுடன் வைரலான இந்த செய்தி போலியானது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தற்போது உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.