ட்ச்

ன்று குஜராத் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

பொதுவாகவே குஜராத் மாநிலம் நிலநடுக்க அபாயம் அதிகமாக உள்ள பகுதியாக பார்க்கப்படுகிறது.  இம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 200 ஆண்டுகளில் குஜராத் மாநிலம் 9 பெரிய நிலநடுக்கங்களை சந்தித்துள்ளது.

இதில் கடந்த 2001-ம் ஆண்டு கட்ச் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கமானது, 200 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட 3-வது மிகப்பெரிய நிலநடுக்கமாக பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று காலை 10.36 மணி அளவில் குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இன்று காலை 10.36 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. புவியியல் ஆய்வு மையம் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானதாக தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து 4.1 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்ச் மாவட்டத்தில் உயிர்சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.