டெல்லி: 18வது மக்களவை அமைப்பதற்கான 5வது கட்ட லோக்சபா தேர்தல்  இன்று நடைபெற்று வருகிறது. இன்று  காலை 9 மணி வரை 10.28% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 15.35% வாக்குகள் பதிவாகி, குறைந்த அளவாக மகாராஷ்டிராவில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது,.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே  நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. அதன்படி, மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிவுற்றது.  இன்று  ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு  நடைபெற்று வருகிறது. முன்னதாக தற்கான தேர்தல் பரப்புரை கடந்த 18ம் தேதியுடன் நிறைவுற்றது.

வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.  49 தொகுதிகளிலும் இன்று காலை முதல் விறுவிறுப்பான வாக்குப்பதிவை காண முடிந்தது. உத்தரபிரதேசத்தில் முந்தைய 4 கட்ட தேர்தல்களை விட இன்று அதிகளவு வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

இதை அடுத்து, காலை 9 மணி நிலவரப்படி 5-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 10.28 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. பீகார் – 8.86 சதவீதம் உத்தரபிரதேசம்- 10.88 சதவீதம் ஜம்மு & காஷ்மீர் – 7.63 சதவீதம் ஜார்க்கண்ட் – 11.68 சதவீதம் லடாக்- 10.51 சதவீதம் மகாராஷ்டிரா – 6.33 சதவீதம் ஒடிசா- 6.87 சதவீதம் மேற்கு வங்காளம்- 15.35 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.