சென்னை: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸை கைது செய்ய இடைக்கால தடை விதித்ததுடன், அவர் சரண் அடையவும் விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது, அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்ட சிறப்பு டிஜிபிஎ ராஜேஸ்தாஸ் மீது பெண் எஸ்பி ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார். அதாவது, கடந்த 2021ஆம் ஆண்டு காவல்துறை பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி உறுதி செய்தது.
இதையடுத்து ராஜேஸ்தான்தரப்பில், , தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரி ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி எம். தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், விழுப்புரம் நீதிமன்றம் விதித்த 3 ஆண்டுகள் சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, ராஜேஷ் தாஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. . தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என அவர் தனது மனுவில் கோரி இருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி பேலா திரிவேதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில், ராஜேஷ் தாஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். இரு தரப்பு வாதங்களையும் தொடர்ந்து, ராஜேஷ் தாஸை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அவர் சரணடையவும் விலக்கு அளித்தது. அத்துடன், ராஜேஷ்தாஸ் மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.