சென்னை: சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதனால் பொதுமக்கள், ரெயின்கோட், குடை எடுத்துச் செல்லும்படி அறிவுறுத்தி உள்ளார்.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 20 ஆம் தேதி தமிழ்நாட்டில் அதி கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், சென்னையில் வெயிலுடன் இன்றைய நாள் தொடங்கியிருக்கலாம்.. ஆனால், சிறப்பான வானிலை மாற்றம் நடக்கும். வெளியே செல்பவர்கள் மறக்காமல் RAINCOAT எடுத்துச் செல்லுங்கள் என்று தனது சமூகவலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.