சென்னை: கிண்டி காமராஜர் நினைவிடம் இடுகாடு போன்று காணப்படுகிறது, காமராஜர் என்ன தவறு செய்து விட்டார் எதற்காக இந்த நினைவிடம் பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாட்டில் மாறி மாறி ஆட்சிக்கு வரும் திராவிட கட்சிகள், தங்களது தலைவர்களின் நினைவிடங்களை மட்டும் பல கோடி ரூபாய் செலவில் அவ்வப்போது மாற்றங்களை செய்து பராமரித்து வருகிறது. ஆனால், மற்ற தலைவர்களின் நினைவாலயங்கள் அமைந்து கிண்டி வளாகத்தில் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்வது இல்லை. இதனால், அங்குள்ள காமராஜர் உள்பட பல தலைவர்களின் நிவைலயங்கள் புதர்மண்டி போய் பொதுமக்கள் பார்வையிட லாயக்கற்ற வகையில் காணப்படுகிறது.
இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள காமராஜர் நினைவிடத்தில் , தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை ஆய்வு செய்தார். தொடர்ந்து, அங்குள்ள காந்தி, காமராஜர் நினைவிடங்களையில் மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தது, “காமராஜர் நினைவிடம் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது என்றவர், பொதுமக்கள், காங்கிரஸ் தொண்டர்கள் எல்லாம் காமராஜர் நினைவிடம் பராமரிப்பு இல்லாமல் இருப்பதாக வேதனை தெரிவித்தனர். நினைவிடம் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். எங்களுடைய மாவட்ட தலைவர்கள், காங்கிரஸ் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொண்டனர். இதனால் ஆய்வு செய்ததாகவும், அரசு, இந்த இடங்களை பாரமரிக்காமல் உள்ளது அதிர்ச்சியாக இருக்கிறது என்றார்.
தற்போதுள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் காமராஜர் ஆட்சியில் பணியாற்றுவதற்கு வாய்ப்பு இல்லை. அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதும் முன்னாள் இருந்த முதலமைச்சர் ஆட்சிகளில் பணிபுரிந்து இருப்பார்கள் அவர்களுக்கு ஏன் பெருந்தலைவர் காமராஜர் அருமை தெரியவில்லை என தெரியவில்லை என கேள்வி எழுப்பியவர், எதற்காக இப்படி இடுகாடு போன்று இதை வைத்திருக்கிறார்கள் என்ற வேதனை காங்கிரஸ் தோழர்களுக்கு இருக்கிறது.
எங்கு பார்த்தாலும் புள்ளும் புதருமாக இருக்கிறது. குடிப்பதற்கு கூடி தண்ணீர் வசதி இல்லை. வெளி வாகனம் தினமும் நிறுத்தப்படுவதாக புகார்கள் இருக்கின்றது. எங்களின் வேண்டுகோள் என்னவென்றால் நீங்கள் நேராக கடற்கரை சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா உடைய பாருங்கள் இதையும் பார்த்து ஒப்பிட்டு வாய்ப்பு இருந்தால் பாருங்கள். காமராஜர் என்ன தவறு செய்து விட்டார் எதற்காக இந்த நினைவிடம் பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது என்ற வேதனையை வெளிப்படுத்தினார்.
காமராஜரை கொலை செய்ய முயற்சித்தவர்கள் கூட இன்று அவரை தலையில் வைத்து அரசியல் செய்ய முயற்சி செய்து வருகிறார்கள். காமராசரை கொலை செய்ய வேண்டும் என முயற்சி செய்த இயக்கங்கள் இன்று காமராஜர் புகழை பேசுகிறார்கள். எதற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகள் இப்படி இதை பராமரிக்காமல் இருக்கிறார்கள்.
ஏற்கனவே இந்த இடத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது எப்படி இருந்து இப்போது எப்படி இருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் நினைவிடத்திற்கு ஒரு அளவுகோல் காமராஜர் நினைவிடத்திற்கு ஒரு அளவுகோல் என்பது எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். திமுக அரசின் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு ஒரு வேண்டுகோள் குறைந்தபட்சம் அம்மையார் ஜெயலலிதா உடைய நினைவிடம் போன்று காமராஜர் நினைவிடத்தை பராமரியுங்கள் என கூறினார்.
இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சரிடமும் புகார் கொடுக்க உள்ளோம் அப்போதும் நடவடிக்கை இல்லை என்றால் முதலமைச்சரிடம் புகார் அளிக்க உள்ளோம் என தெரிவித்தார்.
ஜெயலலிதா நினைவிடத்தை மட்டும் ஏன் கூறுகிறார்கள் கருணாநிதி நினைவிடமும் அங்கே தானே உள்ளது என்ற கேள்விக்கு, காமராசர் எப்படி வாழ்ந்தார் அரசியல் வரலாறு ஆட்சியில் இருந்த வரலாறு இதையெல்லாம் ஏன் புரிந்து கொள்ளவில்லை என்பதற்காக தான் கூறினோமே தவிர யாரையும் சங்கடப்படுத்த வேண்டும் என கூறவில்லை. மேலும் நான் உண்மையை கூறினால் சங்கடப்படுவார்கள். அதனால் என்னால் அதை கூறவில்லை அதோட நிறுத்திக் கொள்வோம். அதுதான் நாகரிகம் கூட என தெரிவித்தார்.
பெருந்தலைவர் காமராஜர் ஒப்பற்ற எந்த அழுக்கும் இல்லாமல் வெளிப்படை தன்மையோடு ஆட்சி செய்தவர் காமராஜர் அவர்கள் மீது எந்த தண்டனையும் பெறாதவர். காமராஜர் மீது ஒரு குறைந்தபட்ச குற்றச்சாட்டை கூட இல்லாத ஒரு முதலமைச்சர் அதற்காகத்தான் இப்படி அவர் நினைவிடம் பராமரிக்கப்படுகிறதா என்கின்ற ஒரு கேள்வி எழுகிறது. அரசியல் நாகரிகம் எங்களுக்கு தெரியும் என கூறினார்.
நெல்லை காங்கிரஸ் நிர்வாகி கொலை வழக்கு குறித்தான கேள்விக்கு பதில் கூறியவநேற்று கூட முன்னாள் தலைவர்கள் அனைவரும் ஆலோசனை மேற்கொண்டோம். ஒரு சில தலைவர்களிடம் தொலைபேசியில் அழைத்து தங்கள் கருத்தை தெரிவித்து இருக்கிறோம். காவல்துறையின் விசாரணையும் சரியாக போய்க்கொண்டிருக்கிறது. துரிதமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தனிப்படை அமைத்திருக்கிறார்கள் பாராட்டக்கூடிய விசாரணை போய்க்கொண்டிருக்கிறது. அதனை நாங்கள் நம்பி இருப்பது எல்லாம் காவல்துறை விசாரணை மட்டும்தான். கண்ணியமாக நியாயமாக செய்வார்கள் என்று நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்றார்.