சென்னை: சென்னையில் சமீப காலமாக, சட்டவிரோத நடவடிக்கைகள் புற்றீசல்கள் போல் அதிகரித்து வரும் நிலையில், ‘ஸ்பா’ எனப்படும் மசாஜ் நிறுவனமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 55 ஸ்பாக்களுக்கு போலீசார் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஸ்பா மசாஜ் என்பது ஒரு வகையான மசாஜ். இது மனிதர்களின் தளர்வை ஊக்குவிப்பது, மன அழுத்தத்தைக் குறைப்பது மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துகிறது என கூறப்படுகிறது. தற்போதைய டிஜிட்டல் வளர்ச்சி காரணமாக, மன அழுத்ததுக்கு ஆளாகும் இளைய தலைமுறையை குறிவைத்து ஸ்பா மசாஜ்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஸ்பா அமைப்புகளில் பயன்படுத்தப்படும் சில பொதுவான வகையான மசாஜ் ஸ்வீடிஷ் மசாஜ் , ஆழமான திசு மசாஜ் , ஹாட் ஸ்டோன் மசாஜ் மற்றும் அரோமாதெரபி மசாஜ் ஆகியவை அடங்கும். ஸ்பா மசாஜ் செய்யும் போது, வாடிக்கையாளர் பொதுவாக ஒரு மசாஜ் டேபிளிவ்ல படுக்கவைத்து, தெரபிஸ்ட் மசாஜ் ஆயில் அல்லது லோஷனை தோலில் தடவி, தசைகளை தளர்த்தவும், சுழற்சியை மேம்படுத்தவும் பல்வேறு பக்கவாதம் மற்றும் நுட்பங்களைப் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. மொத்தத்தில், ஸ்பா மசாஜ்கள் பதற்றம் மற்றும் மன அழுத்தத்தைப் போக்கவும், தூக்கத்தை மேம்படுத்தவும், ஒட்டுமொத்த உடல் மற்றும் மன நலனை மேம்படுத்தவும் சிறந்த வழி என வறப்படுகிறது.
இதனால், ஸ்பாக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகின்றனர். இதை வைத்து பல ஸ்பாக்கள், விபச்சாரம் உள்பட சட்ட விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சென்னையில் ஸ்பா என்ற பெயரில் மசாஜ், பாலியல் தொழில்கள் சட்டவிரோதமாக நடந்த வருவதாகக் கிடைத்த தகவலை அடுத்து தனிப்படை போலீசார் கடந்த ஒரு மாதமாக தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர்.
இதன் தொடர்ச்சியாக, கோயம்பேடு, அண்ணா நகர், திருமங்கலம் பகுதிகளில் உரிமம் இல்லாமல் சட்ட விரோதமாக இயங்கி வந்த 55 ஸ்பாக்களுக்கு காவல்துறையினர் சீல் வைத்தனர். ஸ்பாக்களின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.