சென்னை: கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக தடுப்பூசி தயாரி நிறுவனமான அஸ்ட்ரா ஜெனகா அறிவித்து உள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிறுவனத்தின் தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படுவது உறுதியான நிலையில், அஸ்ட்ரா ஜெனகா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதற்கிடையில், மாரடைப்பு உள்ளிட்ட பல பிரச்சனைதளை கோவிஷீல்டு தடுப்பூசியுடன் தொடர்பு படுத்த வேண்டாம். கோவிஷீல்டு தடுப்பூசி பெரிய அளவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும், மக்களின் மன ரீதியான பாதிப்புகளே அதிகம் எனவும், இதனால் பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம் எனவும் தெரிவித்து உள்ளனர்.
அஸ்ட்ரஜெனகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இணைந்து தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட பலருக்கு உடல் ரீதியாக பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படுவதாக புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பான வழக்கில் அஸ்ட்ரஜெனகா நிறுவனம் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் மிகவும் அரிதாக ஒரு சிலருக்கு த்ரோம்போசிஸ் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் (TTS) அதாவது ரத்த உறைதல் எனப்படும் பக்கவிளைவு ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.
இந்த சூழலில் கோவிஷீல்டு தடுப்பூசிப் போட்டுக்கொண்ட மக்கள் பலர் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தியாவில் முக்கால்வாசி பேர் இந்த தடுப்பூசியை எடுத்துக்கொண்ட நிலையில், இதனால் நமக்கும் ரத்த உறைதல் உள்ளிட்ட ஏதேனும் பக்கவிளைவு ஏற்படுமோ என உயிர் பயத்தில் உறைந்துள்ளனர்.
இந்த நிலையில், தடுப்பூசியால் மிகவும் அரிதான பக்க விளைவுகள் ஏற்படுவதை அஸ்ட்ராசெனகா நிறுவனம் அண்மையில் ஒப்புக் கொண்டிருந்த நிலையில், உலகம் முழுவருதும் கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராசெனகா நிறுவனம் புதன்கிழமை அறிவித்துள்ளது.
லண்டன் உயா்நீதிமன்றத்தில் தடுப்பூசி தொடா்பான வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் பிரிட்டனை சேர்ந்த அஸ்ட்ராசெனகா நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையில், ‘ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசியால் (கோவிஷீல்டு) மிகவும் அரிதான பக்க விளைவாக ரத்தம் உறைதல் ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தியாவில் சீரம் நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசியை 175 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியால் ‘அரிதான’ பக்கவிளைவு: லண்டன் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் ஒப்புதல் லண்டன் உயர்நீதிமன்றத்தில் அஸ்ட்ராசெனகா தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், கோவிஷீல்டு தடுப்பூசியால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவர்கள் தலைமையில் குழு அமைக்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கோவிஷீல்டு தடுப்பூசியால் ஏற்பட்ட பக்கவிளைவுகளால் காருண்யா, ரிதாய்கா ஆகிய இளம்பெண்கள் உயிரிழந்துள்ளதாக கூறி அவர்களின் பெற்றோர்கள் சீரம் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில், உலகளவில் தங்களின் கொரோனா தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராசெனகா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் தங்களது தடுப்பூசியால், மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் இரத்த உறைவு, ரத்த பிளேட்லெட்டுகள் எண்ணிக்கை குறைவு ஏற்பட வாய்ப்பு இங்கிலாந்து நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்ட ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதுடன், கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை திரும்ப பெறுவதாக அறிவித்து உள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், கோவிஷீல்டு தடுப்பூசிப் போட்டுக்கொண்ட நபர்களில் லட்சத்தில் ஒருவருக்கே பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் தேவையற்ற வதந்திகளை நம்பி பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் எனவும் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இந்தியாவில் மட்டும் அல்ல உலக அளவில் மாரடைப்பு உள்ளிட்ட பல பாதிப்புகள் பொதுவாக இருக்கும் சூழலில், கோவிஷீல்டு தடுப்பூசிப் போட்டுக்கொண்ட நபர்களுக்குதான் இதுபோன்ற ஆபத்துக்கள் வருவதாக எந்த ஆய்வும் குறிப்பிடவில்லை என தெரிவித்துள்ளதடன், கோவிஷீல்டு தடுப்பூசியால் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் எண்ணிக்கை பல மடங்கு குறைந்ததாகவும், இதனோடு பக்கவிளைவு பாதிப்புகளை ஒப்பிடுகையில் அது அரிதிலும் அரிதாக ஒரு சிலருக்கே ஏற்பட வாய்ப்பு என்று கூறியிருப்பதுடன், நவீன காலத்தில், பலருக்கு உடல் உழைப்பு இன்மை. மது பழக்கம், முறையற்ற உணவு பழக்க வழக்கம் உள்ளிட்ட பலவற்றால்தான் மாரடைப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகள் வருவதாகவும், அதை கோவிஷீல்டு தடுப்பூசியுடன் தொடர்பு படுத்த வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், பொதுமக்கள் இதன் மீதாக ஏற்பட்டுள்ள அச்சத்தில், அதை யோசித்து யோசித்து வரும் மன ரீதியான பாதிப்புகளே அதிகம் எனவும், கோவிஷீல்டு தடுப்பூசி பெரிய அளவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும், இதனால் பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம் எனவும் தெரிவித்து உள்ளனர்.
முன்னதாக, அஸ்ட்ராஜெனெகா நிறுவனம், பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பித்த சட்ட ஆவணத்தில், அதன் கோவிட் தடுப்பூசி “மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், டிடிஎஸ் (TTS) பாதிப்பை ஏற்படுத்தும்” என்று ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட பிறகு இது ஏற்படும் போது விஐடிடி (VITT) (தடுப்பூசியால் தூண்டப்பட்ட இம்யூன் த்ரோம்போசிஸ் வித் த்ரோம்போசைட்டோபீனியா) என்றும் அறியப்படுகிறது.
டிடிஎஸ் / விஐடிடி என்பது ரத்தம் உறைதல் மற்றும் த்ரோம்போசைட்டோபீனியா (குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கை) ஆகியவை ஒன்றிணைந்து வகைப்படுத்தப்படும் ஒரு அரியவகை நோய் ஆகும்.
டிடிஎஸ் / விஐடிடி-இன் விளைவுகள் உயிருக்கு ஆபத்தானவை. இதில் பக்கவாதம், மூளை பாதிப்பு, மாரடைப்பு, நுரையீரல் அடைப்பு மற்றும் உறுப்பு நீக்கம் ஆகியவையும் அடங்கும் என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
த்ரோம்போசிஸ் பாதிப்பு தடுப்பூசி போடாதவர்களுக்கும் பல வடிவங்களில் ஏற்படலாம். தடுப்பூசி போடப்பட்ட பிறகு அரிதான நோய் பாதிப்பான டிடிஎஸ் / விஐடிடி, த்ரோம்போசிஸ் உள்ளவர்களுக்கு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அஸ்டாஜெனகா கூற்றுப்படி, டிடிஎஸ் என்பது த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோமோடு கூடிய த்ரோம்போசிஸ் என்பதைக் குறிக்கிறது.