டெல்லி: யுஜிசி-நெட் தோ்வு ஜூன் 18-ஆம் தேதிக்கு மாற்றம் செய்து  என்டிஏ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.  சிவில் சர்வீசஸ் பிரிலிம்ஸ் தேர்வு தேதிகளுடன் பிரச்சினை ஏற்பட்டதைத் தொடர்ந்துஆ,  UGC NET 2024 தேர்வு ஜூன் 18 ந்தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது.

மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் தோ்வைக் கருத்தில் கொண்டு தேசிய தகுதித் தோ்வு (நெட்) ஜூன் 18-ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக பல்கலைக் குழு மானியக் குழு (யுஜிசி) தலைவா் ஜகதீஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.

‘ உதவி பேராசிரியர் ‘ மற்றும் ‘ ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் ‘ ஆகியவற்றுக்கான இந்திய நாட்டினரின் தகுதியை நிர்ணயிக்கும் ஒரு தேர்வான UGC-NET ஐ நடத்தும் பணியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தேசிய தேர்வு முகமையிடம் (NTA) ஒப்படைத்துள்ளது. இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் . யுஜிசி-நெட் டிசம்பர் 2018 முதல் கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) முறையில் தேசிய தேர்வு முகமையால் (NTA) நடத்தப்படுகிறது.

ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (JRF) மற்றும்/ அல்லது உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதி, UGC -NET இன் தாள்-I மற்றும் தாள்-II ஆகியவற்றில் வேட்பாளரின் ஒட்டுமொத்த செயல்திறனைப் பொறுத்தது. உதவிப் பேராசிரியர் பணிக்கு மட்டுமே தகுதிபெறும் விண்ணப்பதாரர்கள் JRF விருதுக்கு பரிசீலிக்கத் தகுதியற்றவர்கள். உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வில் தகுதிபெறும் விண்ணப்பதாரர்கள், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்கள்/கல்லூரிகள்/மாநில அரசுகளின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளால் நிர்வகிக்கப்படுகின்றனர், ஏனெனில் உதவிப் பேராசிரியர் பணிக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படலாம்.

UGC-NET ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை (ஜூன் & டிசம்பர்) நடத்தப்படுகிறது . யுஜிசி-நெட் தேர்வு சுழற்சியை முறைப்படுத்த, தேசிய தேர்வு முகமை (என்டிஏ), யுஜிசியின் ஒப்புதலுடன் யுஜிசி நெட் 2023 ஜூன் 83ல் நடத்தி வருகிறது. அதன்படி, நடப்பாண்டு (2024) இந்திய அளவில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணியில் சேருவதற்கான தகுதியைப் பெறவும் முனைவா் பட்டத்துக்கான சோ்க்கை பெறவும் நெட்  தோ்வு ஜூன் 16-ஆம் தேதி நடைபெறும் என யுஜிசி ஏற்கனவே  தெரிவித்திருந்தது.

இதற்கிடையில்,  இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி உள்ளிட்ட குடிமைப் பணியிடங்களுக்காக மத்திய பணியாளா் தோ்வாணையம் நடத்தும் முதல் நிலைத் தோ்வு ஜூன் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால், யுஜிசி நெட் தேர்வு எழுதுவதில் சிக்கல் எழுந்தது. இதுகுறித்து,  குடிமைப் பணிகள் முதல் நிலைத் தோ்வும் நெட் தோ்வும் ஒரே நாளில் நடைபெறுவது குறித்து மாணவா்கள் தரப்பில் யுஜிசிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஜூன் 16-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருந்த நெட் எழுத்து தோ்வு ஜூன் 18-ஆம் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) மாற்றப்பட்டுள்ளது.