டெல்லி: கொரோனா தடுப்பூசிகளால் ரத்தத் உறைதல் போன்ற பாதிப்புகள் அரிதாக ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிப்பதாக, வழக்கு ஒன்றின் விசாரணையின்போது கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ரா ஜெனிகா ஒப்புதல் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய கொரோனா தொற்று நோயில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க பல்வேறு நிறுவனங்கள் தடுப்பூசிகளை தயாரித்தன. அதன்படி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்- ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பு மருந்தான “கோவிஷீல்ட்”, பாரத் பயோடெக்கின் “கோவேக்சின்”, ZYDUS CADILA-வின் “ZyCoV-D”, ரெட்டிஸ் பரிசோதனைக் கூடத்தில் உருவாகி வரும் ரஷ்யாவின் “ஸ்புட்னிக் V” மற்றும் சீரம் நிறுவனத்தின் மற்றொரு தடுப்பு மருந்தான “NVX-CoV2373″ஆகிய தடுப்பூசிகள் இந்திய உள்பட உலகம் முழுவதும் பொதுமக்களுக்கு போடப்பட்டு வந்தன. இதனால், கொரோனா பரவல் கட்டுக்குள் வந்தது. ஆனால், இந்த தடுப்பூசிகளால் பக்க விளைவுகள் ஏற்படுவதாக ஏராளமான புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. கொரோனா காலக்கட்டத்துக்கு பிறகு, அதிக அளவிலான ரத்தம் உறைதல் தொடர்பான மரணங்கள் ஏற்பட்டு வருகிறது. இது மக்களடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை செலுத்திய பிறகு, தனக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி ஜேமி ஸ்காட் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரணையின்போது, அஸ்ராஜெனிகா நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையில், கொரோனா தடுப்பூசி அரிதான சந்தர்ப்பங்களில், ரத்த உறைவு மற்றும் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கைக்கு வழிவகுக்கும் நிலையை ஏற்படுத்தும் என்றும், கடுமையான தலைவலி, வயிற்று வலி ஏற்பட வாயப்பு உள்ளதாகவும், சிகிச்சையில் ஆன்டிகோகு லேஷன் தெரபி அடங்கும் என ஆய்வுகள் தெரிவிப்பதாக அஸ்ட்ராஜெனெகா தெரிவித்து உள்ளது.
ஆஸ்ட்ராஸெனெகா ஆராய்ச்சியாளர்களால் தயாரிக்கப்பட்ட ’கோவிஷீல்டு’ (வேக்ஸ்ஸேவ்ரியா) தடுப்பூசிக்கு, பாதுகாப்புக் காரணங்களை மேற்கோள் காட்டி, பிரிட்டனில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், கோவிஷீல்டு தடுப்பூசிக்கு பிரிட்டனில் அனுமதி மறுக்கப்படும் முன், அ ந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்ட ஜேமி ஸ்காட் என்ற நபருக்கு, ஆமூளையில் தீவிர பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் சார்பில் இந்தியாவில் சீரம் நிறுவனம், கோவிஷீல்டு தடுப்பூசிகளை தயாரித்து வழங்கியது.
இதுதொடர்பான வழக்கில், ஆஸ்ட்ராஸெனெகா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், அந்நிறுவனத்தின் தயாரிப்பான ’கோவிஷீல்டு’ தடுப்பூசியை செலுத்திக் கொண்டோரில், ஒரு சிலருக்கு ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் ‘த்ரோம்போஸைடோபேனியா சிண்ட்ரோம்’ பாதிப்புடன் கூடிய ’த்ரோம்போஸிஸ்’ காரணமாக, ரத்தத்தில் (பிளேட்லெட்ஸ்) ரத்த தட்டுக்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது, அரிதான சந்தர்ப்பங்களில், ரத்த உறைவு மற்றும் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கைக்கு (டி.டி.எஸ்.) வழிவகுக்கும் நிலையை ஏற்படுத்தும். ஆனால் இது மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே நடக்கும். எனவே பொதுமக்கள் அச்சப்படத் தேவை யில்லை என்று தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வு குறித்த விரிவான தகவல் விரைவில் வெளியிடப்படுமென்று தெரிகிறது.