நாகை:  கோடியக்கரை அருகே  கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த  மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள்  கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர். இது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக மீனவர்கள், கடலில் மீன்பிடித்துக்கொண்டிருக்கும்போது எல்லை தாண்டி வந்ததாக கூறி, இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், கைது செய்வதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்துவதும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், நாகை மற்றும் கோடியக்கரை அருகே அந்த பகுதி   மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த கடற்கொள்ளையர் கள், தமிழக மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக  கூறப்படுகிறது. அப்போது தமிழக மீனவர்கள் சிலர் கடலில் குதித்து தப்பியதாகவும், மற்றவர்களை அடைத்து உதைத்த கொள்ளையவர்கள்,  தமிழக மீனவர்களிடம் இருந்து,  ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான மீன் பிடிக்கும் வலைகள், ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட பொருட்கள் பறித்து சென்றதாகவும் அதுமட்டுமின்றி ஒரு மீனவரை கடுமையாக தாக்கியதில் அவரது தலையில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் இருந்ததாகவும் இதையடுத்து மற்ற மீனவர்கள் அவரை கரைக்கு கொண்டு வந்து மருத்துவமனையில் அனுமதித்து உள்ளதாகவும் கூறப்படு கிறது.

இந்த கொலைவெறித் தாக்குதல் நடத்தியது இலங்கையை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் என தமிழக மீனவர்கள் தெரிவித்து உள்ளர். இதனால்  அச்சம் அடைந்துள்ள மீனவர்கள், இதுதொடர்பாக   மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.