ட்டி

மைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்த ஹெலிகாப்டரை பறக்கும் படையினர் சோதனை செய்துள்ளனர்.

வரும் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளதால் முக்கிய தலைவர்கள் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வகையில் தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு கட்டங்களாகப் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகிறார்.

இன்று அவர் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார். எனவே உதயநிதி ஸ்டாலின் கோத்தகிரி வழியாகச் சாலை மார்க்கமாக நேற்று ஊட்டிக்கு வர இருந்த நிலையில் திடீரென்று பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டு ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி வந்தார்.

கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி அருகேயுள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்திற்கு உதயநிதி ஸ்டாலின் பயணித்து வந்த ஹெலிகாப்டரை தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அவர்கள் அங்கு இருந்த பை உள்பட அனைத்தையும் ஒன்று விடாமல் சோதனை செய்தனர்.

அந்த  15 நிமிடச் சோதனையில் பணமோ பொருட்களோ எதுவும் சிக்கவில்லை. பிறகு ஊட்டியில் உள்ள தனியார் ஓட்டலுக்குச் சென்று தங்கியுள்ள உதயநிதி ஸ்டாலின் இன்று ஊட்டி காபி ஹவுஸ் பகுதியில் ஆ.ராசாவை ஆதரித்து பிரசாரம் செய்து இதன் பின்னர் குன்னூரில் பிரசாரம் செய்து கோவை செல்ல உள்ளார்.