சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் மொத்தம் 950 பேர் களமிறங்கி உள்ளனர். மொத்தமுள்ள 950 வேட்பாளர்களில், 945 பேர் அளித்துள்ள தகவலின் அடிப்படையில், 39 தொகுதிகளில் போட்டியிடும் 138 வேட்பாளர்கள் (15 சதவீதம்) மீது குற்றவியல் வழக்குகள் (Criminal cases) இருப்பதாகவும் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) தகவல் தெரிவித்து உள்ளது.
தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் அதிக கிரிமினல் வழக்குகள் உள்ள மாநிலமாக பீகார் உள்ளது. அம்மாநிலத்தில் உள்ள லாலுவின் ஆர்ஜேடி கட்சிமீது ஏராளமான கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டைச்சேர்ந்த திமுக 2வது இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து, சமாஜ்வாதி கட்சி 3வது இடத்திலும், 4வது இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், 5வது இடத்தில் பாஜகவும் இடம்பெற்றுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி 6வது இடத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி 7வது இடத்தையும் பிடித்துள்ளது.
நாட்டின் 18வது மக்களவை அமைக்கப்படுவதற்காக மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்கட்டமாக ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ந்தேதி நடைபெறுகிறது. 2-ம் கட்ட தேர்தல்கள் ஏப்ரல் 26-ம் தேதியும், 3-ம் கட்ட தேர்தல் மே 7-ம் தேதியும், 4-ம் கட்ட தேர்தல் மே-13-ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே-25-ம் தேதியும், 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியும் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ந்தேதி நடைபெறும் என்றும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
அதன்படி, தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் முற்கட்ட பாராளுமன்றத் தேர்தல் கூரமு 19-ந் தேதி வாக்குப்பதிவு நடை பெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக, மற்றும் நாம் தமிழர் என நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதி களிலும் 609 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில், ஆளும் திமுக சார்பில் 23, அதிமுக 34, பாஜக 23, காங்கிரஸ் 9 மற்றும் பகுஜன் சமாஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் தலா 39, பாமக சார்பில் 10 பேர், நாடாளும் மக்கள் கட்சி சார்பில் 12 பேர் களத்தில் உள்ளனர். இதனால், மாநிலம் முழுவதும் அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த தகவல்களை, ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) வெளியிட்டு உள்ளது.
தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் அதிக கிரிமினல் வழக்குகள் உள்ள மாநிலமாக பீகார் உள்ளது. அம்மாநிலத்தில் உள்ள லாலுவின் ஆர்ஜேடி கட்சிமீது ஏராளமான கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டைச்சேர்ந்த திமுக இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து, சமாஜ்வாதி கட்சி 3வது இடத்திலும், 4வது இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும், 5வது இடத்தில் பாஜகவும் இடம்பெற்றுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி 6வது இடத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி 7வது இடத்தையும் பிடித்துள்ளது.
கட்சி வாரியாக கிரிமினல் வழக்குகள் உள்ள வேட்பாளர்களில் லாலுவின் கட்சி முதலிடத்தை பெற்றுள்ள. அக்கட்சியான, RJD யின் 4 வேட்பாளர் களில் 4 (100%) பேர் மீது 100 சதவிகித கிரிமினல் வழக்கு உள்ளது. அதுபோல, தமிழ்நாட்டில், , திமுகவின் 22 வேட்பாளர்களில் 13 (59%) பேர் மீது 59% கிரிமினல் வழக்குகளும், 3 பேர் முது 43 சதவிகித கிரிமினல் வழக்குகளும் உள்ளன. அதிமுகவின் 36 வேட்பாளர்களில் 13(36%) பேர் மீது 36 சதவிகித வழக்குகளும் உள்ளதாக தெரிவித்து உள்ளது.
குற்றப் பின்னணி, நிதி, கல்வி, பாலினம் மற்றும் மக்களவைத் தேர்தல் 2024 ஆம் கட்டம் I வேட்பாளர்களின் பிற விவரங்களின் பகுப்பாய்வு
102 மக்களவைத் தொகுதிகளில் முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ள 102 மக்களவைத் தொகுதிகளில் 42 தொகுதிகள் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேட்பாளர்கள் கிரிமினல் வழக்குகளை எதிர்கொண்டுள்ள தொகுதிகள் என ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) 1,618 வேட்பாளர்களின் சுய உறுதிமொழிப் பத்திரங்களை ஆய்வு செய்த பின்னர் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் 1,625 பேரில்.
குற்றவியல் பின்னணி மற்றும் கிரிமினல் வழக்குகள் உள்ள வேட்பாளர்கள்: 1618 இவர்களில் 251 (16%) பேர் தங்களுக்கு எதிராக குற்ற வழக்குகளை அறிவித்துள்ளனர்.
தீவிர குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்கள்: 1618 பேரில் 160 (10%) பேர் தங்களுக்கு எதிராக கடுமையான குற்ற வழக்குகளை அறிவித்துள்ளனர்.
அறிவிக்கப்பட்ட தண்டனை வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்கள்: 14 வேட்பாளர்கள் தங்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகளை அறிவித்துள்ளனர்.
கொலை தொடர்பான வழக்குகள் உள்ள வேட்பாளர்கள்: 7 வேட்பாளர்கள் தங்களுக்கு எதிராக கொலை தொடர்பான வழக்குகளை (IPC பிரிவு -302) அறிவித்துள்ளனர்.
கொலை முயற்சி தொடர்பான வழக்குகள் உள்ள வேட்பாளர்கள்: 19 வேட்பாளர்கள் தங்களுக்கு எதிராக கொலை முயற்சி (ஐபிசி பிரிவு 307) தொடர்பான வழக்குகளை அறிவித்துள்ளனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்கள்: 17 வேட்பாளர்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை அறிவித்துள்ளனர்.
வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்குகள் உள்ள வேட்பாளர்கள்: 35 வேட்பாளர்கள் தங்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சு தொடர்பான வழக்குகளை அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் 39 தொகுதிகளில் போட்டியிடும் வே பாளர்களின் குற்றப்பின்னணி குறித்த தகவல்கள் விவரம்:-
மொத்தமுள்ள 950 வேட்பாளர்களில், 945 வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்துள்ள தரவுகளில் உள்ள புள்ளிவிவரங்களில் இருந்து ADR இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
தி.மு.க. வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு – ரூ. 31.22 கோடி.
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் 22 வேட்பாளர்களில், 21 பேரின் சொத்து மதிப்பு ரூ.1 கோடியை தாண்டியுள்ளது.
அ.தி.மு.க. வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு – ரூ.37.53 கோடி.
இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடும் 34 வேட்பாளர்களில், 33 பேர்களின் சொத்து மதிப்பு ரூ.1 கோடியை தாண்டி உள்ளது.
தாமரைச் சின்னத்தில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு – ரூ.38.93 கோடி. அவர்களில் 22 பேரின் சொத்து மதிப்பு ரூ.1 கோடியை தாண்டியுள்ளது.
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 38 சதவீத வேட்பாளர்களின் சொத்து ரூ.1 கோடியை தாண்டி உள்ளது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 9 வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு-ரூ.24.18 கோடி.
சுயேச்சையாக தாக்கல் செய்த 606 பேரில் 62 பேர்களின் சொத்து மதிப்பு ரூ.1 கோடியை தாண்டி உள்ளது.
அனைத்து வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு – ரூ.4.24 கோடி.
மொத்தமுள்ள 950 வேட்பாளர்களில், 945 பேர் அளித்துள்ள தகவலின் அடிப்படையில், 39 தொகுதிகளில் போட்டியிடும் 138 வேட்பாளர்கள் (15 சதவீதம்) மீது குற்றவியல் வழக்குகள் (Criminal cases) இருப்பதாகவும் தகவல் உள்ளது. இவர்களில் 81 பேர் மீது (9 சதவீதம்) தீவிர குற்றவியல் வழக்குகள் (Serious Criminal Cases) உள்ளதாக தெரியவந்துள்ளது. (இவ்வழக்குகளில் அவர்கள் தண்டனை பெற்றால், அது 5 ஆண்டு சிறை செல்ல வேண்டியிருக்கும்) தீவிர குற்றவியல் வழக்குகளில் இருப்போருக்கு பிணை கூட எளிதில் கிடைக்காது. சிலர் மீது RPA act (section 8)ன் கீழ் வழக்குகள் உள்ளன.
போட்டியிடும் 23 பா.ஜ.க. வேட்பாளர்களில், 16 பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. 9 பேர் மீது தீவிர குற்றவியல் வழக்குகள் உள்ளன.
போட்டியிடும் 22 தி.மு.க. வேட்பாளர்களில், 13 பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. 6 பேர் மீது தீவிர குற்றவியல் வழக்குகள் உள்ளன.
போட்டியிடும் 34 அ.தி.மு.க. வேட்பாளர்களில், 12 பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. 6 பேர் மீது தீவிர குற்றவியல் வழக்குகள் உள்ளன.
போட்டியிடும் 9 காங்கிரஸ் வேட்பாளர்களில் 7 பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. 2 பேர் மீது தீவிர குற்றவியல் வழக்குகள் உள்ளன.
போட்டியிடும் நாம் தமிழர் கட்சி 39 வேட்பாளர்களில், 11 பேர் மீது குற்றவியல் வழக்குகள் உள்ளன. 6 பேர் மீது தீவிர குற்றவியல் வழக்குகள் உள்ளன.
பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களில் 6 பேர் மீதும், தே.மு.தி.க., அ.மு.மு.க., சி.பி.எம்., வி.சி.க கட்சிகளில் தலா ஒரு நபர் மீதும் குற்றவியல் வழக்குகள் உள்ளன.
குற்றவியல் வழக்குகளில் இருப்பவர்களும், கோடிகளுக்கு அதிபதிகளாக இருப்பவர்களும் தேர்தல் களத்தில் அதிகம் உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
முழுமையான அனைத்து விவரங்களை காண கீழே உள்ள லிங்கை-ஐ ஒபன் செய்து பார்க்கலாம்…