மதுரை: விருதுநகர் தொகுதி தேர்தல் களம் பரபரப்பாக இயங்ககிகொண்டிருக்கிறது. அங்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக வேட்பாளராக களமிறங்கி உள்ள நடிகை ராதிகாவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள சரத்குமார், மனைவியுடன் இரு சக்கர வாகனத்தில் ஹாயாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் முதற்கட்ட தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள வரும் 19ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் நான்குமுனை போட்டி நிலவி வரும் நிலையில்,
இதையடுத்து, வருகிற 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளில் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தலை ஒட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் விருதுநகர் தொகுதியில் அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. விருதுநகர் தொகுதியில், இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக சிட்டிங் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் களமிறங்கி உள்ளார். அவரை எதிர்த்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், வேட்பாளராக ராதிகா சரத்குமாரும், அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக கட்சியின் வேட்பாளராக விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகர், நாம் தமிழர் கட்சி சார்பில், கெளசிக் என்பவரும் களத்தில் உள்ளனர். இதனால், அங்கு கடுமையான போட்டி நிலவுகிறது. தேர்தல் பிரசாரம் தகதகவென தகித்துக்கொண்டிருக்கிறது.
இதைத்தொடர்ந்து, பாஜக வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள ராதிகா சரத்குமாரை ஆதரித்து அவரது கணவர் சரத்குமார் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். பொதுக்கூட்டங்களில் திராவிட கட்சிகள் ஊழல் நிறைந்து என விமர்சித்து வருவதுடன், தனது மனைவி ராதிகாகை, சரத்குமார் தனது கணவர் சரத்குமார் உடன் பைக்கில் அமர்ந்தவாறு பல்வேறு தெருக்களுக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.