மால்டாகா உத்தர்
மேற்கு வங்க மாநிலம் மால்டாகா உத்தர் தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தனது தேர்தல் பிரசாரத்தில் ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுத்துள்ளார்..
கடந்த 2019ஆம் ஆண்டில் சி.பி.எம். கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான காகென் முர்மு, ஆண்டில் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார் அவர் தற்போது மேற்கு வங்க மாநிலத்தின் மால்டாகா உத்தர் தொகுதியின் வேட்பாளர் மற்றும் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார் அவர் வாக்கு கேட்டு வீடு, வீடாகச் சென்றபோது,. ஒரு பெண்ணுக்கு முத்தம் கொடுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திரிணாமுல் காங்கிரசார் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், பெண்களுக்கு எதிராக பா.ஜ.க. தலைவர்கள் செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தனர்.
எக்க்ஷ் தல்ளத்தில் அக்கட்சியினர்
”நீங்கள் பார்த்த விசயங்களை உங்களால் நம்ப முடியவில்லை என்றால், நாங்கள் அதனை விளக்குகிறோம். முர்மு, அவருடைய பிரசாரத்தின்போது, பெண் ஒருவரை முத்தமிடுகிறார் . மல்யுத்த வீராங்கனைகளைப் பாலியல் துன்புறுத்தல் செய்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்முதல், வங்காள பெண்களுக்கு எதிரான ஆபாசப் பாடல்கள் பாடுவது எனப் பெண்களுக்கு எதிரான அரசியல்வாதிகள் பா.ஜ.க.வில் உள்ளனர்”
என்று தெரிவித்துள்ளனர்
.உள்ளூர் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் பேசிய அந்த பெண்,
“அது அன்பின் வெளிப்பாடு. என்னுடைய தந்தை வயதுடைய நபர் ஒருவர், என்னிடம் அவருடைய அன்பைக் காட்டுகிறார். எனது கன்னத்தில் முத்தம் வைக்கிறார். இதில் என்ன பிரச்சனை இருக்கிறது? மக்கள் ஏன் அசிங்க மனநிலையுடன் இருக்கின்றனரோ? இதில் ஒன்றும் தவறு இல்லை
எனக் கூறியுள்ளார்.