திருச்சி: மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் ஒரேஒரு தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. சார்பில் இன்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பப்பட்டு உள்ளது. மதிமுக தேர்தல் அறிக்கையை அதன் நிறுவனம் வைகோ இன்று திருச்சியில் வெளியிட்டார்.
நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மதிமுக, திருச்சி தொகுதியில் மட்டுமே போட்டியிடுகிறது. அந்த தொகுதியில் தனது மகனான துரை வையாபுரியை வேட்பாளராக வைகோ களமிறக்கி உள்ளார். இதனால், விரக்தி அடைந்த மதிமுக எம்பி. கணேசமூர்த்தி , தற்கொலை செய்யும் முடிவில், பூச்சிக்கொல்லி விஷமருந்து அருந்தி சிகிச்சை பெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது மதிமுக தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இன்று திருச்சியில் நடைபெற்ற மதிமுக நிகழ்ச்சியில், 24 உரிமை முழக்கம் என்ற தலைப்பில், வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள வாக்குறுதிகளை வைகோ வாசித்துகாட்டினார்.
மதிமுகவின் தேர்தல் அறிக்கையில் 74 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. அதில், ஜிஎஸ்டி வரி நீக்கம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, சிறுபான்மையினர் நலம், ஹைட்ரோ கார்பனுக்கு நிரந்தரத் தடை,, தேசிய நூலாக திருக்குறள் அறிவிக்கப்படும், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும், ஒரே நாடு ஒரே தேர்தல் கூடவே கூடாது, குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்ப பெற வேண்டும், கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும், கூடங்குளம் அணுமின் நிலையம் மூடல் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன/