புதுடெல்லி

டெல்லி அமைச்சர் அதிஷி தேர்தல் ஆணையம் பாஜகவின் துணை அமைப்பாக மாறிவிட்டதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் டெல்லி கல்வி அமைச்சருமான அதிஷி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் தம்மை பா.ஜ.க.வில் சேருங்கள் அல்லது ஒரு மாதத்துக்குள் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவீர்கள் என்று தனக்கு மிரட்டல் வந்ததாகப் பரபரப்பு குற்றம் சாட்டினார்.

தான் உள்பட 4 ஆம் ஆத்மி தலைவர்கள் விரைவில் கைது செய்யப்பட இருப்பதாகவும் அதிஷி தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி மந்திரி அதிதிக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இன்று செய்தியாளர்களிடம் அதிஷி,

”பாஜக ஊடகங்களில் தேர்தல் குறித்து செய்தி வெளியிட்ட அரை மணி நேரத்திற்கு பின்புதான் தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸ் எனக்கு மின்னஞ்சல் மூலம் வந்தது, .தேர்தக் ஆணையம்  பா.ஜ.க. புகார் கொடுத்தால் மட்டும் விரைந்து நடவடிக்கை எடுக்கிறது. அதுவும் பா.ஜ.க. புகார் அளித்த 12 மணி நேரத்திற்குள் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புகிறது. தேர்தல் ஆணையம் பாஜகவின் துணை அமைப்பாக மாறிவிட்டதா என்பதுதான் எனது கேள்வி. 

பாஜகவிடம் அனைத்து மத்தியப் புலனாய்வு அமைப்புகளும் அடி பணிந்துவிட்டன என்பது கவலை அளிக்கிறது. இந்த பட்டியலில் தேர்தல் ஆணையமும் தற்போது இணைந்துள்ளது.  தேர்தல் ஆணையம் ஆம் ஆத்மி கட்சியின் பல்வேறு பிரச்சினைகள் குறித்த புகார்களைப் பதிவு செய்ய முயன்றபோது அவகாசம் வழங்கவில்லை. எதிர்கட்சி தலைவர்களை மத்திய அமைப்புகள் குறிவைத்து வருகின்றன, எனினும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.”

என்று கூறியுள்ளார்.