ல்பைகுரி

நேற்று ஏற்பட்ட சூறாவளியால் மேற்கு வங்க மாநிலத்தில் 5 பேர் உயிரிழந்து 500 பேர் காயம் அடைந்துள்ளனர். 

 நேற்று இரவு மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி நகரில் வீசிய கடுமையான சூறாவளியால் பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டது. சூராவளியில் சிக்கி, ஒரு பெண் உள்பட 5 பேர் உயிரிழந்து 500 பேர் வரை காயமடைந்தனர்.

சூறாவளியால் வீடுகள் பல சேதமடைந்தன. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தன்னுடைய மற்ற நிகழ்ச்சிகளை எல்லாம் ரத்து செய்து விட்டு நேற்றிரவு ஜல்பைகுரிக்கு சென்று நிலைமையைப் பார்வையிட்டார்.

பின்னர், ஜல்பைகுரி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்குச் சென்று சூறாவளியால் பாதித்த மக்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.  இங்குத் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம்,

“அரசு நிர்வாகம் மக்களுக்குத் தேவையான உதவிகளை அரசு நிர்வாகம் வழங்கும்.  நாங்கள் சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்களை அறிந்திருக்கிறோம். இதில், உயிரிழப்பு என்பது மிகப் பெரிய பாதிப்பு. 

நான் பேரிடர் மேலாண் முயற்சிகளை மேற்கொண்ட நிர்வாகத்தினருக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். இந்த நிலைமையை எதிர்கொள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் சிறப்பாகப் பணியாற்றி உள்ளனர்” 

என்று கூறியுள்ளார்.