நியூயார்க்
வட கொரியாவுக்கு எதிரான ஐ நா பாதுகாப்புக் குழு தீர்மானத்தை ரஷ்யா முறியடித்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வட கொரியாவுக்கு எதிரான ஐ.நா. பொருளாதார தடைகளை ஐ.நா. நிபுணர்களைக் கொண்டு மேற்பார்வை செய்யும் தீர்மானத்தை அமெரிக்கா கொண்டு வந்தது.
இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 13 நாடுகள் வாக்களித்தன.
ஆயினும் ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி, அந்த தீர்மானத்தை ரத்து செய்தது.
சீனா இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.