அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம் பால்டிமோரில் உள்ள முக்கிய பாலம் ஒன்று சரக்கு கப்பல் மோதியதில் முழுவதுமாக இடிந்து விழுந்தது.
அமெரிக்க நேரப்படி இன்று அதிகாலை 1:30 மணிக்கு நிகழ்ந்த இந்த விபத்தில் பிரான்சிஸ் ஸ்காட் பாலத்தின் கீழ் படாப்ஸ்கோ ஆற்றில் சென்ற பெரிய சரக்குக் கப்பல் ஒன்று பாலத்தின் தூண் மீது பலமாக மோதியது.
இதில் அந்த சரக்கு கப்பல் தீ பிடித்து எறிந்த நிலையில், பாலம் துண்டுதுண்டாக உடைந்து ஆற்றில் விழுந்தது, இதனை அடுத்து அந்த சரக்கு கப்பலும் நீரில் மூழ்கியது.
விபத்து நடந்த போது பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்களும் நீரில் மூழ்கியதை அடுத்து இந்த விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
விபத்தில் சிக்கியவர்களை மீட்க மீட்புப் படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.