டில்லி

நீட்  முதுகலைத் தேர்வு ஜூலை 7 ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் தற்போது ஜூன் 23 ஆம் தேதியே நடைபெற உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றதைப் போலவே, இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்டம் ஏப்ரல் 26ம் தேியும், மூன்றாம் கட்டம் மே 7ம் தேதியும், 4ம் கட்டம் மே 13ம் தேதியும், 5ம் கட்டம் மே 20, 6ம் கட்டம் மே 25, 7ம் கட்டம் ஜூன் 1ம் தேதியும் நடைபெறுகிறது.

மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க 96.88 கோடி வாக்காளர்கள் தகுதியானவர்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது கடந்த 2019ம் ஆண்டின் வாக்காளர்களை விட 6 சதவிகிதம் அதிகமாகும். 49.7 கோடி ஆண் வாக்காளர்கள், 47 கோடி பெண் வாக்காளர்கள் இந்த லோக்சபா தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள் என்று அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், முதுநிலை நீட் தேர்வுக்கான தேதி மாற்றப்பட்டிருக்கிறது. அதாவது, ஜூலை 7ம் தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு 14 நாட்கள் முன்கூட்டியே, ஜூன் 23ம் தேதி நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருக்கிறது. அதேபோல இந்த தேர்வுகளின் முடிவுகள் ஜூலை 15ம் தேதி வெளியிடப்படும் என்றும், ஆகஸ்ட் 5 முதல் அக்டோபர் 15ம் தேதி வரை கலந்தாய்வு எனவும் தேர்வு முகமை அறிவித்திருக்கிறது.