டில்லி
நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் ஒரு மாற்றத்தை மக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்ப்பதாக கார்கே கூறி உள்ளார்.
மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. வாக்குகள் ஜூன் 4-ந் தேதி எண்ணப்பட உள்ளன. இத்துடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலச் சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் காங்கிரஸ் கட்சி ‘இந்தியா’ கூட்டணிக்குத் தலைமை தாங்குகிறது. காங்கிரஸ் 82 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டுதை தொடர்ந்து தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
டில்லியில் இன்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,
” மக்கள் ஒரு மாற்றத்தை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர். கடந்த 2004 தேர்தலில் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசு ‘இந்தியா ஒளிர்கிறது’ என்ற முழக்கத்தை எழுப்பி தோல்வியை தழுவியது. மீண்டும் அதே நிலை தற்போதைய பா.ஜ.க. அரசுக்கும் ஏற்படும். நாம் அனைவருக்கும் நமது தேர்தல் அறிக்கை மற்றும் நமது உறுதிமொழிகளை நாட்டு மக்கள் அனைவரிடமும் எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.
காங்கிரஸ் தொனரள் கிராமங்கள், நகரங்களில் உள்ள வீடுதோறும் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். இந்த தேர்தல் அறிக்கையில் என்ன வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறதோ, அவை கண்டிப்பாக நிறைவேற்றப்படும். தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளை அளிப்பதற்கு முன், அந்த வாக்குறுதிகளை நம்மால் நிறைவேற்ற முடியுமா என்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் 1926 முதல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை, நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்புக்கான ஆவணமாக கருதப்படுகிறது. ராகுல் காந்தி மேற்கொண்ட யாத்திரைகள் வெறும் அரசியல் யாத்திரைகளாக அல்லாமல், மிகப்பெரிய மக்கள் தொடர்பு இயக்கமாக அரசியல் வரலாற்றில் குறிப்பிடப்படும்.”
என்று உரையாற்றி உள்ளார்.