சென்னை: மக்களவைத் தேர்தலில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் மற்றும் திமுக தேர்தல் அறிக்கையையும் திமுக தலைவரும்,  முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளை (மார்ச் 20) வெளியிடுகிறார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில்,  திமுக வேட்பாளர் பட்டியல் மற்றும்  திமுக தேர்தல் அறிக்கையையும் முதல்வர் ஸ்டாலின் நாளை வெளியிடுகிறார்.

நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை (மார்ச் 20ந்தேதி) வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. இதையொட்டி, வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் இறுதி செய்து வருகின்றன. திமுக கூட்டணி சார்பில், தமிழ்நாடு புதுச்சேரி என மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும்  வேட்பாளர்கள் களமிக்கப்படுகின்றனர்.   கடந்த  தேர்தலில் கடந்தமுறை திமுக.,வின் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, இந்த முறை பம்பரம் அல்லது வேறு தனிச்சின்னத்தில் போட்டியிடும் என அறிவித்துள்ளது. அதுபோல, விசிக அவர்களது சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.  காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இதுவிர திமுக  21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதாவத, வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், திருவண்ணாமலை, ஈரோடு, வேலூர், தர்மபுரி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், நீலகிரி, தேனி, பொள்ளாச்சி, தஞ்சாவூர், தென்காசி, தூத்துக்குடி, கோவை, ஆரணி தொகுதிகளில் களமிறங்குகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி விழுப்புரம், சிதம்பரம் ஆகிய இரு தொகுதிகளிலும், –  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி – மதுரை (சு.வெங்கடேசன்), திண்டுக்கல் (சச்சிதானந்தம்)  என இரு தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சி நாகப்பட்டினம் (வை.செல்வராஜ்), திருப்பூர் (கே.சுப்பராயன்) ஆகிய இரு கட்சிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (நவாஸ்கனி)  ராமநாதபுரம் தொகுதியிலும் , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- நாமக்கல் (சூர்யமூர்த்தி) தொகுதியிலும், திருச்சியில் மதிமுக சார்பில் அவரது மகன் துரை வையாபுரியும் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில், நாளை ( 20ந்தேதி) திமுக சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட உள்ளது. அத்துடன், நாடாளுமன்றத்துக்காக தயாரிக்கப்பட்டுள்ள திமுக தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படுகிறது.

திமுக உத்ததேச வேட்பாளர்கள்: வட சென்னையில் கலாநிதி வீராசாமியும்,மத்திய சென்னையில் தயாநிதி மாறனும் தென் தென்னையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுபோல, ஸ்ரீபெரும்புத்தூரில் டி.ஆர்பாலுவுக்கும் நீலகிரியில் ஆ.ராசாவுக்கும் தூத்துக்குடியில் கனிமொழிக்கும் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என நம்பப்படுகிறது.

அரக்கோணத்தில் ஜெகத்ரட்சகனும் வேலூரில் கதிர் ஆனந்தும் காஞ்சியில் செல்வமும்,

தருமபுரியில் செந்தில்குமார், ஆ.மணி, பழனியப்பன் ஆகிய 3 பேரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

பெரம்பலூரில் அருண் நேரு, ஈரோட்டில் பிரகாஷ், பொள்ளாச்சியில் சண்முகசுந்தரம், தென்காசியில் தனுஷ் குமார், ஆரணியில் தரணிவேந்தன் ஆகியோர் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சியில் கௌதம சிகாமணி அல்லது சிவலிங்கத்துக்கும்,

தேனியில் தங்கதமிழ்ச்செல்வனுக்கும் இம்ரானுக்கும் வாய்ப்பு தரப்படலாம்.

சேலத்தில் செல்வகணபதி மற்றும் பி.கே.பாபு,

தஞ்சாவூரில் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் மற்றும் அஞ்சுகம் பூபதி,

கோவையில் மகேந்திரன் மற்றும் கோகுல் உத்தேசப்பட்டியலில் உள்ளனர்.