மும்பை: மார்ச் 31 முதல் சென்னை-கோவை இடையே கூடுதல் விமான சேவை இயக்கப்படும் என இன்டிகோ விமான சேவை நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி இரவு சென்னையில் இருந்து கோவைக்கும், அதிகாலையில் கோவையில் இருந்து சென்னைக்கும் விமானம் இயக்கப்பட உள்ளது.
இந்தியாவின் அரியான மாநிலத்தில் உள்ள குர்கானைத் தலைமையிடமாகக் கொண்ட விமான நிறுவனம் இன்டிகோ (IndiGo) ஆகும். இந்தியாவிலுள்ள ஏர்லைன் நிறுவனங்களில் இது மிகப்பெரியது ஆகும். இது பயணிகளுக்கான விமானங்களை குறைந்த கட்டணத்தில் இயங்கி வருகிறது. பெருநகரம் மட்டுமின்றி சிறுநகரங்களுக்கு சிறிய அளவிலான ஜெட் விமானங்களையும் இயக்கி வருகிறது.
முன்னதாக கொரோனா காலக்கட்டத்தில், கடும் நிதி நெருக்கடியில் சிக்கிக்கொண்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், விமான சேவைகளை தொடர்ந்து நடத்துவதற்காக கேட்டிருந்த அவசர காலக் கடனுதவி கிடைக்காத நிலையில் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரலில், விமான சேவையை நிறுத்துவதாக அறிவித்தது.
25 ஆண்டுகளுக்கும் மேலான செயல்பாடுகளுக்குப் பிறகு, கடுமையான பண நெருக்கடிக்கு மத்தியில் முழு சேவை விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் ஏப்ரல் 17, 2019 அன்று நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து ஊழியர்கள் பிரச்சினை என பல்வேறு நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்ட நிலையில், மீண்டும் விமான சேவைகளை தொடங்கி நடத்தி வருகிறது.
ஜெட் விமான சேவை தமிழ்நாட்டிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பயணிகளின் கோரிக்கையை ஏற்று சென்னை கோவை இடையே தற்போது இயக்கப்பட்டு வரும் சேவைகளுடன் கூடுதல் விமான சேவைகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது. அதன்படி மார்ச் 31ந்தேதி முதல் கோவைக்கு சென்னையில் இருந்து கூடுதல் சேவைகள் அமலுக்கு வரும் என தெரிவித்து உள்ளது.
அதன்படி சென்னையில் இருந்து இரவு 9மணிக்கும், கோவையில் இருந்து காலை 6.30 மணிக்கும் விமானம் இயக்கப்படும் என அறிவித்து உள்ளது.