சென்னை: சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை (17ஆம் தேதி) 44 புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் தாம்பரம் இடையே தண்டவாள பணிகள் நடைபெற உள்ளதால், ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
சென்னை மக்களின் போக்குவரத்துக்கு பேருதவியாக இருப்பது மின்சார ரயில் சேவை. பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் சிரமமின்றி பயணம் செய்யும் வகையில், அதிகாலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. விரைவில் மின்சார ரயில்களில் விரைவில் ஏசி பெட்டிகளும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாகளே வார இறுதியில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாளை மறுநாள் (மார்ச் 17) சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில் சேவை இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாளை மறுநாள் காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, 44 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், மக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தி யுள்ளது. அதே நேரத்தில், பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, காலை 11.55, நண்பகல் 12.45, பகல் 1.25, பகல் 1.45, பகல் 1.55 பகல் 2.40, பகல் 2.55 மணிக்கு தாம்பரம்-செங்கல்பட்டு இடையே இயக்கப்பட உள்ளது.
மேலும், செங்கல்பட்டு-தாம்பரம் இடையே காலை 9.40, காலை 10.55, காலை 11.30, காலை 11.05, பகல் 1.00 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. காஞ்சிபுரம் – தாம்பரம் இடையே காலை 9.30 மணிக்கும், தாம்பரம் – திருமால்பூர் இடையே நண்பகல் 12.00 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.