சென்னை: “சென்னையை மிக சிறந்த மாநகரமாக மாற்ற வேண்டிய பொறுப்பை அமைச்சர்களிடம் கொடுத்துள்ளேன்”  என வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளை தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளின் கீழ் பதினோரு துறைகளை உள்ளடக்கி 4181.03 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 219 திட்டப் பணிகள் – மாண்புமிகு  தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டவர், வடசென்னை வளர்ச்சித் திட்டத்திற்கான இலச்சினை வெளியிட்டு சிறப்புரை ஆறிறினார்.

அப்போது,  இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வளர்ச்சியை ஏற்படுத்தியது நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்படுவதாக கூறியவர்,  “வட சென்னை வளர்ச்சித் திட்டம் ” – இந்த திட்டத்தின் பெயர் ஒன்றே போதும் நமது திராவிட மாடல் அரசு இப்பகுதியை எவ்வளவு முக்கியமாக கருதுகிறது என்பதற்கு ஓர் சான்று. என்று கூறினார்.

“என்னை எம்எல்ஏவாகவும், மேயராகவும், துணை முதல்வராகவும், இப்போது முதல்வராகவும் ஆக்கியது வடசென்னை தான்” என்ற முதலமைச்சர்,   வடசென்னையில் உள்ள  “பாரிமுனை பேருந்து நிலையம் ரூ.832 கோடி மதிப்பில் நவீனமயாக்கப்படும்”  என்றார்.

“மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என குற்றம்சாட்டிய மு.க.ஸ்டாலின்,  “வெள்ளத்தின்போது மக்களை பார்க்க வராதவர், ஓட்டு கேட்க மட்டும் வரலாமா?” “ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு ஏன்?” என்றும் பிரதமர் மோடியை கடுமையாக சாடினார்.