டெல்லி: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, மத்தியஅரசு அடுத்தடுத்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி, மத்தியஅரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று (மார்ச் 8ந்தேதி) கேஸ் விலை சிலிண்டருக்கு ரூ.100 குறைக்கப்பட்ட நிலையில், மத்தியஅரசின் கீழ் செயல்படும் வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு அளித்து மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும், வாரத்திற்கு 5 நாட்கள் வேலை தொடர்பாக பரிசீலனை செய்து வருவதாகவும் தெரிவித்து உள்ளது.
மத்தியஅரசின் இந்த அறிவிப்பான, 17 சதவீத வருடாந்திர ஊதிய உயர்வை இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர் சங்கங்கள் ஏற்றுக்கொண்டதாக தெரிவித்து உள்ளன.
வங்கி ஊழியர்களின் நெடுநாள் கோரிக்கையான வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை என்ற கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அதுமட்டுமின்றி வங்கி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக 17 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படுவதாகவும் இந்த ஊதிய உயர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் முதல் அமலுக்கு வருவதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது இது குறித்த ஒப்பந்தம் வங்கி ஊழியர்கள் சங்கம் கையெழுத்திட்டு உள்ளது .
இந்த ஊதிய உயர்வு காரணமாக 8 லட்சம் வாங்கி ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும் முன் தேதி விட்டு அமல்படுத்தப்படுவதால் வங்கி ஊழியர்களுக்கு ஒரு பெரிய தொகை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஊதிய உயர்வு காரணமாக பொதுத்துறை வங்கிகளுக்கு ரூபாய் 8284 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சனி ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் விடுமுறை என்ற கோரிக்கையை மத்திய அரசு பரிசினை செய்து வருவதாகவும் விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.