சென்னை: மிக்ஜாம் புயலால் சேதமடைந்த வீடுகளை சீரமைக்க ரூ.45.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 5ந்தேதி அன்று சென்னையை புரட்டி போட்ட மிக்ஜாம் புயல்,. “ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கரையைக் கடந்து. வங்கக்கடலில் உருவாக மிக்ஜாம் புயலால் சென்னையில் கடுமையான மழை பெய்தது , டிசம்பர் மூன்றாம் தேதி பகலில் விட்டு, விட்டு பெய்த மழை, அன்று இரவு முதல் நான்காம் தேதி இரவு வரை இடைவிடாமல் மழை பெய்தது.

இந்த மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை காரணமாக சென்னை மீண்டும் வெள்ளத்தில் மிதந்ததது.  பொதுமக்கள் அவதியடைந்தனர். திமுக அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக  கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. திமுக அரசு ரூ.4000 கோடி செலவில் மழை நீர் வடிகால்கள் அமைக்க பணம் ஒதுக்கி பணிகள் முடிவடைந்து விட்டதாக கூறிய நிலையில், சென்னை மீண்டும் வெள்ளத்தில் மிதந்தது மக்களிடையே கடுஐமயான அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த  புயல் குறித்த முன்னறிவிப்பு 10 நாட்களுக்கு முன்பாகவே வெளியிடப்பட்டுவிட்ட போதிலும், புயலால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை தடுப்பதிலும், குறைப்பதிலும் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது என குற்றம் சாட்டப்பட்டது.

சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் வெள்ளத்தில் மிதந்த நிலையில்,   சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் மழைநீர் வடியாமலும், மின்சார வசதி இல்லாமலும் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பெற்றனர். .

சென்னையில் கோடம்பாக்கம், மாம்பலம், அசோக்நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த மழையால் வீடுகளும் சேதமடைந்தன. இந்த நிலையில், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளத.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 2023, டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது.

இதனால் இம்மாவட்டங்களில் வசித்து வந்த பெரும்பாலான ஏழை மக்களின் வீடுகள் பெரிதும் சேதமுற்றன. அவ்வாறு மழைவெள்ளத்தினால் பகுதியாக சேதமடைந்த வீடுகளை பழுது பார்ப்பதற்கு ரூ.2. லட்சம் வரையும் முழுமையாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாக கட்டுவதற்கு ரூ.4 லட்சம் வரையும் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இவ்வறிவிப்பிற்கிணங்க, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளிலுள்ள மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பகுதியாக மற்றும் முழுமையாக சேதமடைந்த 955 வீடுகளுக்கு பழுது நீக்கம் செய்யவும் மற்றும் புதிய கட்டுமானத்திற்கும் ரூபாய் 24.22 கோடியும், பேரூராட்சி பகுதிகளில் உள்ள 577 சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.21.62 கோடியும் ஆகமொத்தம் ரூ.45.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.