சென்னை: அதிமுக கூட்டணியில் அகில இந்திய ஃபார்வட் பிளாக் கட்சி இணைந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் 4 முனை போட்டி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. திமுக தலைமையிலான ஒரு அணியும், அதிமுக தலைமையில் 2வது அணியும், பாஜக தலைமையில் 3வது அணியும் உருவாகி உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியும் தனித்து போட்டியிடுகிறது. இதனால் 4 முனை போட்டி நிலவுகிறது.

இநத் நிலையில், அதிமுக கூட்டணியில் அகில இந்திய ஃபார்வட் பிளாக் கட்சி இணைந்துள்ளது.  சென்னை கிரீன்வேஸ்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சந்திப்பு  நடைபெற்றது.

இதில்,.தொகுதி பங்கீடு குறித்து இரு கட்சியும் முதற்கட்ட ஆலோசனை நடைபெற்றதாகவும், பார்வர்டு பிளாக் கட்சி,  தேனி, ராமநாதபுரம் தொகுதியில் ஏதேனும் ஒரு தொகுதியை கேட்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.