சென்னை: தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இன்று 71வது பிறந்தநாள். இதையொட்டி, அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

துனது 71வது பிறந்தநாளையொட்டி,  இன்று காலை கோபாலபுரம் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார். தொடர்ந்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவ படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தார். பின்னர், மெரினாவில் உள்ள  அண்ணா, கருணாநிதி, நினைவிடங்களில் மரியாதை செய்தார்.

 காலை 8.30 மணி அளவில்  சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கலைஞர் கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  தொடர்ந்து,  வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியின்போது அமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் உள்பட அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  மேலும் திமுக தலைவர் வீரமணி உள்பட பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்ந்து,   சென்னை சிஐடி காலனியில் உள்ள திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி இல்லத்தில் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து தனது குடும்பத்தினருடன் பிறந்தநாள் கேக் வெட்டி மகிழும் மு.க.ஸ்டாலின் 10மணிக்கு மேல் அறிவாலயம் செல்கிறார். அங்கு அரசியல் கட்சி தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துக்களை பெறுகிறார்.