சென்னை: நாடு முழுவதும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 23.50 உயர்ந்து ரூ. 1,960.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் சர்வதேச மாற்றங்களை தொடர்ந்து, இந்தியாவிலும் எரிப்பொருட்களின் விலைகளில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி, மாதந்தோறும் சர்வதேச விலைகளையொட்டி, இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. . அந்த வகையில் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளும் வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் ஆகியவை ஆகியவற்றின் விலையில் மாற்றம் ஏற்படும்.
கடந்த ஆண்டு இறுதியில் கச்சா எண்ணை விலை குறைந்த நிலையில், வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது. அதன்படி, கடந்த டிசம்பர் 22ஆம் தேதி சிலிண்டருக்கு ரூ.39.50 குறைந்து ரூ.1,929க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர், 2024 ஜனவரி மாதம் 1ஆம் தேதி சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் மேலும் ரூ.4.50 குறைக்கப்பட்டு ரூ.1924.50-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆனால், பிப்ரவரி மாதம் கச்சாலை விலை உயர்வு காரணமாக, வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை ரூ.12.50 உயர்த்தப்பட்டு, சென்னையில் ரூ.1937 ஆக உயர்ந்தது. இந்த நிலையில், இந்த மாதமும் (மார்ச் ) வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.23.50 உயர்ந்து ரூ. 1960.50க்கு விற்பனையாகிறது.
அதேவேளையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை