திருவனந்தபுரம்

திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் கேரளாவில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது எனக் கூறி உள்ளார்

நேற்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியபோது,

“மத்திய பாஜக அரசு கேரள மாநிலத்தை ஒருபோதும் புறக்கணிக்காது. பாஜக ஆட்சி கேரளாவில் இல்லை என்றாலும், கேரளாவின் வளர்ச்சிக்கு நாள்தோறும் உழைத்து வருகிறோம்.

கேரள வாக்காளக்ர்ள் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இரட்டை இலக்க வாக்கு சதவீதத்தை அளித்தார்கள். இதைப்போல் விரைவில் நடைபெற உள்ள 2024 மக்களவை தேர்தலில் இரட்டை இலக்க வெற்றியை அளிப்பார்கள்”

என்றார்.

பிரதமர் மோடியின் பேச்சு குறித்து திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர்,

“பாஜக கேரளாவில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாது.  கேரள மாநிலத்தில் பாஜகவின் அடித்தளம் மிகவும் சிறியது ஆகும். கேரள மக்கள் எப்போதும் இந்துத்துவா, இந்தி, இந்து, இந்துஸ்தான அடிப்படையிலான அவர்களின் வேண்டுகோள்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள்” 

என்று தெரிவித்துள்ளார்.