சென்னை: சுமார் 2000 கோடி  அளவிலான போதை பொருள் கடத்தல்  வழக்கில் கைது செய்யபட்ட  திமுக சென்னை மேற்கு  மாவட்ட செயலாளர்  மற்றும் திமுக வெளிநாட்டு  வாழ் அணி தலைவர், திரைப்படத்துறை சேர்ந்தவருமான ஜாபர் சாதிக் திமுகவில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின்  பொதுச்செய லாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார்.

இவர், போதைபொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை திரைத்துறையில் முதலீடு செய்துள்ளதுடன், திமுக உள்பட சில அரசியல் கட்சியினரையும் கைக்குள் போட்டுக்கொண்டு,  மங்கை, மாயவலை, இந்திரா, இறைவன் மிகப் பெரியவன் ஆகிய  திரைப்படங்களையும் தயாரித்துள்ளார்.

திமுகவில் முக்கியப் பொறுப்பில் இருந்து வந்த, அதுவும் வெளிநாட்டு துறையின் தலைவராகவும், திரைப்படத்துறையில் பல்வேறு படங்களுக்கு திரைமறை வாக பண உதவி செய்வருமான ஜாபர் சாதிக்,  பல ஆண்டுகளாக சென்னையில் இருந்து கொண்டு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டு உள்ளார்.

டெல்லியில், சுமார் 2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களைக் கடத்த முயன்ற கும்பல், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், இவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்தக் கும்பலின் தலைவனாகச் செயல்பட்டவர், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த போதை பொருள் கடத்தல் வழக்கில்  ஜாஃபர் சாதிக், மைதீன், சலீம் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 2 வருடங்களாக, தமிழகத்தில் போதை பொருட்கள் புழக்கம் அதிகமாக  இருந்து வரும் நிலையில், அதன்மீது காவல்துறையினர்க முறையான நடவடிக்கை எடுக்காமல் கண்துடைப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், இந்த போதைப்பொருள் நடமாட்டத்தின் பின்னணியில் சாதிக் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இவர் திரைத்துரையில் திரைமறைவாக பல பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அமைச்சர்  உதயநிதி மனைவி கிருத்திகா  உதயநிதி தயாரித்த மங்கை என்ற படத்திற்கு இவர்தான் பைனான்சியர் என்பதும், மற்றொரு நபரான மைதீன் மங்கை படத்தின் நாயகன் என்பதும் தெரிய வந்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து, சாதிக்கை திமுகவில் இருந்து நீக்குவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர்   வெளிட்டுள்ள அறிக்கையில், சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அ.ஜாபர் சாதிக், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்து நிரந்தரமாக நீக்கி (Dismiss) வைக்கப்படுகிறார். இவரோடு கட்சியினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தில்லியில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் சிக்கிய நிலையில் கட்சியில் இருந்து நீக்கி பொதுச்செயலர் துரைமுருகன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

துகுறித்து,  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், “டெல்லியில், சுமார் 2,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களைக் கடத்த முயன்ற கும்பல், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளது. விசாரணையில், இவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்தக் கும்பலின் தலைவனாகச் செயல்பட்டவர், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் என்பதும், அவரது சகோதரரான, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மண்டல துணைச் செயலாளர் முகமது சலீம் மற்றும் மைதீன் ஆகியோர் அவருக்குத் துணையாகச் செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது.

இவர்கள், கடந்த மூன்று ஆண்டுகளில், சுமார் 3,500 கிலோ போதைப் பொருள்களை, 45 முறை வெளிநாடுகளுக்கு அனுப்பியிருக்கலாம் என்றும் அதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை, போதைப் பொருள்கள் மூலம் இவர்கள் சம்பாதித்திருக்கலாம் என்பதும் தெரிய வந்துள்ளது.  போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் தேடப்பட்டுவரும் திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் என்பவர், இந்தப் பணத்தை, தமிழ்த் திரைப்படங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தியுள்ளதும், மேலும் போதைப் பொருள்கள் கடத்தல் மூலம் கிடைத்த லட்சக்கணக்கான பணத்தை, முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஆகியோரிடம் தமிழக அரசு நிவாரண நிதியாக வழங்கியுள்ளனர்.

புகைப்படங்களும், அமைச்சர் சேகர்பாபுவுடன் இருக்கும் புகைப்படங்களும், மற்றொரு தேடப்படுபவரான, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மண்டல துணைச் செயலாளர் முகமது சலீம் என்பவர், விசிக தலைவர் திருமாவளவன் அவர்களிடம் கட்சி நிதி வழங்கியுள்ள புகைப்படங்களும், சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. மேலும், தமிழ்த் திரைத் துறையில் பல இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் இவர்கள் நெருங்கியத் தொடர்பில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியிருக்கின்றன.

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, தமிழகத்தில் போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதையும், பள்ளி மாணவர்கள் வரை, போதைப் பொருள்களின் தாக்கம் பரவியிருப்பதையும், தமிழகத்தில் போதைப் பொருள்கள் பரவலாகக் கிடைத்து வருவதாக ஊடகங்களில் வரும் செய்திகளையும், தமிழக பாஜக சார்பாக எடுத்துக் கூறி, கடுமையான நடவடிக்கைகள் எடுக்குமாறு திமுக அரசை பல முறை வலியுறுத்தியும், இதுவரை உறுதியான நடவடிக்கைகள் எதுவும் எடுத்ததாகத் தெரியவில்லை. தற்போது, திமுகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒருவரே, இத்தனை ஆண்டுகளாக சென்னையில் இருந்து கொண்டு போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்திருப்பது, பலத்த சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது.

இந்தச் சந்தேகங்கள் மேலும் வலுப்படுவதைத் தவிர்க்கவும், போதைப் பொருள்கள் புழக்கம், நமது நாட்டின் மீது தொடுக்கப்படும் போர் என்பதை மனதில் கொண்டும், உடனடியாக தமிழக அரசு போதைப் பொருள்கள் கடத்தலில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.