டில்லி

விவசாயிகள் போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்ததால் ராகுல் காந்தி.மத்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

கடந்த 13 ஆம் தேதி வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்டம் கொண்டுவர வேண்டும் மற்றும் வேளாண் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயச் சங்கங்கள் டில்லி நோக்கி பேரணி நடத்தும் போராட்டத்தைத் தொடங்கின.

நேற்று பஞ்சாப்-அரியானா எல்லையில் நேற்று நடந்த போராட்டத்தில் பங்கேற்ற விவசாயி ஒருவர் காவல்துறையினருடன் நடந்த மோதலில் உயிரிழந்தார். விவசாய அமைப்புக்கள் இதை வன்மையாகக் கண்டித்துள்ளன. மத்திய அரசு மட்டுமே தற்போதைய நெருக்கடிக்கும், உயிரிழப்புக்கும் காரணம் என குற்றம் சாட்டியுள்ளன. மேலும் விவசாயி உயிரிழப்பு விவகாரத்தில் மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

ராகுல் காந்தி தனது எக்ஸ் வலைத்தளத்தில்,

 ‘நேற்று கானவுரி எல்லையில் விவசாயி சுப்கரன் சிங் உயிரிழந்த செய்தி இதயத்தை நொறுக்கியுள்ளது. நான் அவரது குடும்பத்துக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த முறை மோடியின் ஆணவத்தால்  700 க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர்த் தியாகம் செய்தனர்.  அது மீண்டும் அவர்களின் அரங்கேறி உள்ளது, தங்களின் நட்பு ஊடகங்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் பாஜகவிடம் விவசாயிகளின் கொலை பற்றிய கணக்கை ஒரு நாள் வரலாறு நிச்சயம் கோரும்” 

என்று பதிவிட்டுள்ளார்.