ஷம்பு மற்றும் கனவுரி எல்லை வழியாக டெல்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகள் பேரணி மீது ஹரியானா போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைக்க முயன்றனர்.

இதில் பதிண்டா மாவட்டத்தின் பல்லோ கிராமத்தைச் சேர்ந்த சரஞ்சித் சிங் என்பவரது மகன் சுபாகரன் (வயது 23) போலீஸ் தடியடியில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக விவசாய சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

ஹரியானா போலீசார் இதை மருத்துவந்த நிலையில் தலையில் பலத்த காயங்களுடன் ஒருவர் இறந்ததை பட்ரான் மருத்துவமனையின் மூத்த மருத்துவ அதிகாரி உறுதி செய்துள்ளார்.

இந்நிலையில் போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் கனவுரி எல்லையில் போலீசாரை எல்லாப் பக்கத்தில் இருந்தும் சுற்றிவளைத்து தாக்கியதில் 12 போலீசார் காயமடைந்ததாவும் ஹரியானா காவல்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக விவசாயிகளுடன் ஐந்தாவது கட்ட பேச்சுவார்த்தை நடத்த மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா அழைப்பு விடுத்துள்ள நிலையில் பேச்சுவார்த்தை என்ற பெயரில் நேரத்தை வீணடிப்பதாகவும் விவசாயிகளின் பிரச்சனைக்கு தீர்வு காண்பது ஒன்றே நோக்கமாக இருந்தால் விவசாய பொருளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை சட்டபூர்வமாக்கப்படும் என்று பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் தங்களது எக்ஸ் பக்கத்தின் மூலம் பதிவிட்டால் கூட போதும் என்று விவசாய சங்க பிரதிநிதிகள் கூறி வருகின்றனர்.