தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மேலும் 12 கல்லூரிகளை மூட அண்ணா பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வரும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சில கல்லூரிகள் மூடப்படுகிறது.

அந்த வகையில் கடந்த நான்கு ஆண்டுகளாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் 5 சதவீத இடங்களைக் கூட நிரப்பாத 12 கல்லூரிகளை மூட முடிவெடுத்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள இந்த கல்லூரிகளை 2024-25 கல்வி ஆண்டு முதல் மூட முடிவெடுத்துள்ள நிலையில் தற்போது இந்த கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களை வேறு கல்லூரிகளுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel