நியூயார்க்

நியூயார்க் நீதிமன்றம் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு 354 டாலர் அபராதம் விதித்துள்ளது.

நியூயார்க் நீதிமன்றத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட்  டிரம்ப், தனது வணிக நிறுவனம், மகன்கள், ஊழியர்களின் சொத்து மதிப்புகள் மற்றும் நிதி விவரங்கள் குறித்து தவறான தகவல் அளித்து வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வந்தது.

இந்த வழக்கில் டிரம்புக்கு 354 மில்லியன் டாலர்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,947 கோடி) அபராதம் விதித்து நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  தவிர 3 ஆண்டுகளுக்கு வணிகம் மேற்கொள்ளவும் டிரம்ப்புக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

டிரம்ப் இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.