ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இன்சாட் 3டிஎஸ் செயற்கை கோளுடன் GSLV-F14 விண்கலம் நாளை மாலை விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுண்டவுன் இன்று பிற்பகல் தொடங்குகிறது.
இந்திய வானிலை ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தொடர்பான தகவல்களை முன்கூட்டியே பெறும் நோக்கில், இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்களை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கை கோளானது ஜிஎஸ்எல்வி எஃப் 14 விண்கலம் மூலம் நாளை மாலை 5.30 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ்தவான் விண்வெளி தளத்தில் விண்ணில் செலுத்தப்பட உள்ள, இந்த விண்கலத்திற்கான 27.5 மணி நேர கவுண்டவுன் இன்று பிற்பகல் 02.05 மணிக்கு தொடங்குகிறது. INSAT-3DS புவிநிலை பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. பூமி அறிவியல் அமைச்சகம் இந்த திட்டத்திற்கான மொத்த செலவையும் ஏற்றுள்ளது.
ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி. எப்-14 ராக்கெட் 420 டன் எடை கொண்டது. 51.7 மீட்டர் உயரத்துடன் 3 நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டின் முதல் நிலையில் 139-டன் உந்துசக்தியைக் கொண்ட திட உந்துசக்தி மோட்டார் பொருத்தப்பட்டு உள்ளது. அத்துடன் 4 உந்துசக்தி நிலைகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் 40 டன் திரவ உந்துசக்தியை கொண்டுள்ளன. ராக்கெட்டின் 2-வது நிலையில் 40 டன் உந்து சக்தியுடன் கூடிய எந்திரம், 3-வது நிலையில் 15 டன் திரவ ஆக்சிஜன் மற்றும் திரவ ஹைட்ரஜன் நிரப்பப்பட்ட கிரையோஜெனிக் நிலையாகும். எரிபொருள் நிரப்பப்பட்ட நிலையில், ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்
இது, வானிலை மற்றும் பேரிடர் எச்சரிக்கை தகவல்களை முன்கூட்டியே பெறுவதற்காக, ‘இன்சாட்-3டிஎஸ்’ என்ற செயற்கைகோளை வடிவமைத்துள்ளது. இதற்கான ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மற்றும் செயற்கைகோள் தயார் நிலையில் உள்ளது. இந்த நிலையில், ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான 27½ மணி நேர கவுண்ட்டவுன் இன்று (வெள்ளிக்கிழமை) பகல் 2 மணி 05 நிமிடத்தில் தொடங்குகிறது.