நியூயார்க்

மெரிக்காவில் கடும் பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளதால் 1000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அமெரிக்காவில் க்டும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. நாட்டின் வடகிழக்கு மாகாணங்களில் பனிப்புயல் உருவாகி வலுப்பெற்றதால் முக்கிய நகரங்களான நியூயார்க், பாஸ்டன், நியூபோர்ட் போன்றவற்றில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத வகையில் அங்குக் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக வெப்பநிலை மைனஸ் 30 டிகிரியை கடந்தது. முக்கிய நகரங்களில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டு 1000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

சாலைகளிலும், ரயில் வழித்தடங்களிலும் பனித்துகள்கள் மலைகுவியல் போல் குவிந்ததால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக மாசாசூட்சின் பாஸ்டன் நகரில் 20 செ.மீ அளவுக்குப் பனிப்பொழிவு ஏற்பட்டதாகத் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பனிப்புயல் காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது  பென்சில்வேனியா மாகாணத்தில் நிலவிய கடுமையான பனிப்புயல் காரணமாக மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டு 2 லட்சத்திற்கு அதிகமானோர் வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டது. பள்ளி மாணவர்களின் ஆன்லைன் வகுப்புகள் ரத்தாகின.

பனிப்புயல் காரணமாக மாகாணங்களின் பல்வேறு இடங்களில் சாலை விபத்துகள் ஏற்பட்டு இதில் பலர் படுகாயம் அடைந்தனர். வரும் நாட்களில் பனிப்பொழிவு நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் அவசியமின்றி பொதுமக்கள் வெளியே நடமாடுவதற்கு நியூயார்க் உள்ளிட்ட மாகாணங்கள் தடை விதித்துள்ளன.

US, Severe snow fall, 1000 flights, cancelled,