சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் திமுக அரசின் உரையை முழுமையாக வாசிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்த நிலையில், அதன் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாதித்தார். அப்போது, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மேம்பாட்டுக்கு புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்பது உள்பட திமுக அரசின் சாதனைகளை விவரித்தார்.
நடப்பாண்டின் (2024) முதல் பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை இரு நிமிடம் மட்டுமே வாசித்து விட்டு அமர்ந்தார். இதையடுத்து சபாநாயகர் உரையை வாசித்தார். இதைத்தொடர்ந்து, பேரவையில் அலுவல் ஆய்வுக் குழு கூடி எவ்வளவு நாட்கள் பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யும்.
ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாட்கள் விவாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 024-25-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை வரும் 19-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என எற்கனவே அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது குறித்து சபாநயாகர் பேசியது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
- “ தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து, நிறைவில் தேசிய கீதம் இதுதான் மரபு. கணியன் பூங்குன்றனாரின் வரிகளான ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ வரிகள் தான் தமிழ்நாடு அரசை வழிநடத்துகிறது.
- குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒருபோதும் தமிழ்நாடு அரசு அனுமதிக்காது.
- சென்னை பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1,487 கோடி செலவில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
- தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதியை ஒன்றிய அரசு தராதது வருத்தம் அளிக்கிறது. ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு உரிய நிதி ஒதுக்காமல் புறக்கணித்து வருகிறது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு தமிழ்நாடு அரசு கோரிய நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை.
- பேரிடர் நிவாரணம், மெட்ரோ உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒன்றிய அரசு உடனடியாக நிதி வழங்கவேண்டும் என்று ஆளுநர் உரையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அயராத உழைப்பால் அனைத்து துறைகளில் தமிழ்நாடு அரசு முன்னேறி வருகிறது.
-
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது 14.54 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ₹6.64 லட்சம் கோடி முதலீடுகள் செய்தவதற்கு நிறுவங்களுடன் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது
இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை விட, தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் அதிகம் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணவீக்கத்தை கட்டுப்படுவதில் சிறப்பாக செயல்பட்டுள்ளது; தமிழ்நாட்டின் பண வீக்கம் 5.97ஆக உள்ளது. தமிழ்நாடு அரசு பணவீக்கத்தை கட்டுப்படுவதில் சிறப்பாக செயல்பட்டுள்ளது.முதலமைச்சரின் அயராத முயற்சியால் தமிழ்நாடு வளர்ச்சியடைந்து வருகிறது
- நிதி ஆயோக்கின் 2024 ஏற்றுமதி தயார் நிலை குறியீட்டின்படி, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை மிஞ்சி நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது
- கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு அணி 2ம் இடம் பிடித்துள்ளது.
- விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரத்தை காக்க தமிழ்நாடு அரசு உறுதிபூண்டுள்ளது.
- ஆதிதிராவிடர், பழங்குடியினர் தமிழ்நாடு மேம்பாட்டு செயல்திட்டம்-2024 என்ற சட்டம் இந்த கூட்டத்தொடரிலேயே கொண்டு வரப்பட உள்ளது
- *முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அயராத முயற்சியால் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு கண்டுள்ளது. வலுவான பொருளாதாரம், சமூக நல்லிணக்கமுமே தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ காரணம்.
- *பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு திறம்பட செயல்படுகிறது. ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடையும் நோக்கில் தமிழ்நாடு செயல்பட்டு வருகிறது.
- *பேரிடர் காலங்களிலும் பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சாதனைகளை தமிழ்நாடு அரசு அடைந்துள்ளது. சர்வதேச விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திக் காட்டியது பெருமை அளிக்கிறது. தமிழ்நாடு அமைதியான மாநிலமாக திகழ்வதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொழில் தொடங்க ஆர்வம் காட்டுகின்றன.
- *ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு உரிய நிதி ஒதுக்காமல் புறக்கணித்து வருகிறது. தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதியை ஒன்றிய அரசு தராதது வருத்தம் அளிக்கிறது . மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு தமிழ்நாடு அரசு கோரிய நிதியை ஒன்றிய அரசு வழங்கவில்லை.
- *பேரிடர் நிவாரணம், மெட்ரோ உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒன்றிய அரசு உடனடியாக நிதி வழங்கவேண்டும். இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை விட தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் அதிகம். ஜிஎஸ்டி காரணமாக தமிழகத்திற்கு ஆண்டுக்கு 20,000 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
- *மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட பணிகளுக்கு உறுதி அளித்தபடி மத்திய அரசு நிதி அளிக்கவில்லை. மத்திய அரசின் ஒப்புதல் இல்லாததால் மெட்ரோ ரயிலின் 2ம் கட்ட பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
- *மக்களுடன் முதல்வர் திட்டத்தால் 2.40 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கு சிறப்பாக உள்ளதால் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் குவிந்து வருகின்றன. புயல் பாதிப்பு நிவாரணத்திற்கு தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை.
- *திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 24,926 கோடி கடன் தரப்பட்டுள்ளது. 3 லட்சம் பெண்களை கொண்டு புதிதாக 27,000 மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
- *தமிழ்நாடு அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி செயல்படுத்தி வருகின்றன. காலை சிற்றுண்டி திட்டத்தின் மூலம் மாணவர்களின் வருகைப்பதிவு, கற்றல் திறன் அதிகரித்துள்ளது.
- *திராவிட மாடல் அரசு அனைவருக்குமான அரசாக திறம்பட செயல்பட்டு வருகிறது. புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் கல்லூரிகளில் மாணவிகளின் வருகை அதிகரித்துள்ளது.
- *தேர்தல் வாக்குறுதியாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் என்பது நாட்டிற்கே முன்னோடி திட்டமாக அமைந்துள்ளது-
- *ஆதிதிராவிடர், பழங்குடியினர் தமிழ்நாடு மேம்பாட்டு செயல்திட்டம்-2024 என்ற சட்டம் இந்த கூட்டத்தொடரிலேயே கொண்டு வரப்பட உள்ளது.
- *ஊரக, நகர்புறங்களில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் அனைத்து வசதிகளை மேம்படுத்த அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டம் அமலாக உள்ளது.
- *யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரிகள் தான் தமிழ்நாடு அரசை வழிநடத்தி செல்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற உன்னதமான கொள்கை தற்போது பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது.
- *தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்தை பேணி பாதுகாப்பதில் நமது அரசு உறுதியாக உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
- *சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களுக்கு தமிழ்நாடு அரசு எப்போதும் துணை நிற்கும். சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களுக்கு அச்சறுத்தலாக உள்ள சிஏஏ சட்ட. த்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.
- *ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
- *நடப்பாண்டில் குறுவை சாகுபடியின் பரப்பு எப்போதும் இல்லாத அளவில் 5.59 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 2 லட்சம் புதிய வேளாண் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
- *மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்டிட தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாடுபடும்.
- *இலங்கை அரசு கைது செய்த மீனவர்களில் தமிழக அரசின் நடவடிக்கையால் 242 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
உள்பட தமிழ்நாடுஅரசின் பல்வேறு சாதனைகளை பட்டியலிட்டார்.